ஆசிய குற்றத்தடுப்பு அறக்கட்டளை
ஆசிய குற்றத்தடுப்பு அறக்கட்டளை (Asia Crime Prevention Foundation) என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். ஆசியாவில் குற்றத் தடுப்பு தொடர்பான கொள்கைகளின் உதவியுடன் ஆசியாவில் அமைதி மற்றும் உறுதித்தன்மைக்காக இவ்வமைப்பு செயல்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் தூர கிழக்கு நாடுகளின் குற்றத் தடுப்பு மற்றும் குற்றவாளிகளுக்கான சிகிச்சை நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் டோக்கியோவில் 1982 ஆம் ஆண்டு ஆசிய குற்றத்தடுப்பு அறக்கட்டளை தொடங்கப்பட்டது [1] 1991 ஆம் ஆண்டு ஐ.நா. சபை மூலம் சிறப்பு ஆலோசனை தகுதியையும் இந்நிறுவனம் பெற்றது [2] 2000 ஆம் ஆண்டில் இதே நிலையுடன் மறுவகைப்படுத்தப்பட்டது.[3]
ஆசிய குற்றத்தடுப்பு அறக்கட்டளை அமைப்பு மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்துகிறது.[4] விரிவுரைகளையும் [5] சிறந்த வழிகாட்டுதல்களையும் உருவாக்க உதவுகிறது. பாதுகாப்பற்ற நடவடிக்கைகளுக்கான ஐநாவின் குறைந்தபட்ச தரநிலை விதிகள், [2] மற்றும் பிராந்திய திட்டங்களை ஒருங்கிணைத்தல் போன்றவை [6] சில எடுத்துக்காட்டுகளாகும். குற்றத் தடுப்பு மற்றும் 1995 ஆம் ஆண்டு விதி மீறல் நிகழ்த்தியவர்களுக்கான நடவடிக்கை போன்றவற்றுக்காக ஒன்பதாவது ஐக்கிய நாடுகள் காங்கிரசுடன் இணைந்து ஆசிய குற்றத்தடுப்பு அறக்கட்டளை பணிபுரிந்தது. [7]
ஆசிய குற்றத்தடுப்பு அறக்கட்டளை அமைப்பு இலங்கை, [8] ஆங்காங்கு [5] போன்ற நாடுகளில் உள்ள இதன் தேசிய துணை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ JOHNSON, ELMER H.; HINO, MASAHARU (1985-01-01). "UNAFEI (The United Nations Asia and Far East Institute for the Prevention of Crime and Treatment of Offenders) of Tokyo: A Descriptive Note". International Journal of Comparative and Applied Criminal Justice 9 (1-2): 17–24. doi:10.1080/01924036.1985.9688817. பன்னாட்டுத் தர தொடர் எண்:0192-4036. https://doi.org/10.1080/01924036.1985.9688817.
- ↑ 2.0 2.1 Shikita, Minoru. "Society in Action Against Corruption". citeseerx.ist.psu.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.Shikita, Minoru. "Society in Action Against Corruption". citeseerx.ist.psu.edu. Retrieved 2022-01-10.
- ↑ "Quadrennial reports for the period 2000-2003 submitted through the Secretary-General pursuant to Economic and Social Council resolution 1996/31*".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Asia Crime Prevention Foundation (ACPF) Today | Office of Justice Programs". www.ojp.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
- ↑ 5.0 5.1 "HKBEDC shared Hong Kong's successful anti-graft model in the private sector at Tokyo, Japan | What's New | Services | Hong Kong Business Ethics Development Centre". hkbedc.icac.hk. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10."HKBEDC shared Hong Kong's successful anti-graft model in the private sector at Tokyo, Japan | What's New | Services | Hong Kong Business Ethics Development Centre". hkbedc.icac.hk. Retrieved 2022-01-10.
- ↑ "Quadrennial reports for the period 2000-2003 submitted through the Secretary-General pursuant to Economic and Social Council resolution 1996/31*".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ACPF (Asia Crime Prevention Foundation) Today | Office of Justice Programs". www.ojp.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
- ↑ "Sri Lanka News | Online edition of Daily News - Lakehouse Newspapers". archives.dailynews.lk. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.