ஆசிய சிவப்புக்கன்ன அணில்
ஆசிய சிவப்புக்கன்ன அணில் | |
---|---|
மலேசியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகெலும்பி
|
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | திரெமோமிசு
|
இனம்: | தி. ரூபிஜெனிசு
|
இருசொற் பெயரீடு | |
திரெமோமிசு ரூபிஜெனிசு (பிளான்போர்டு, 1878) | |
ஆசிய சிவப்புக்கன்ன அணில் (Asian red-cheeked squirrel-திரெமோமிசு ரூபிஜெனிசு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது தெற்கு சீனா மற்றும் வடகிழக்கு தெற்காசியாவில், இந்திய துணைக்கண்டத்தின் மேற்கில், மற்றும் மேற்கு இந்தோசீன தீபகற்பம் மற்றும் வடக்கு முதல் மத்திய மலாய் தீபகற்பம் வரை. தென்கிழக்காசியாவில் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இவை காணப்படுகின்றன.[2][3][4]
விளக்கம்
தொகுசிவப்புக்கன்ன அணில்கள் பகுதி நில மற்றும் பகுதி மரவாழ் இனமாகும். இவை குறைந்த மற்றும் அதிக உயரப் பகுதிகளில் காணப்படுகின்றன. அதிகபட்சமாக இவை 1,500 மீ. உயரத்தில் வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் மற்றும் புதர் நிலங்களில் வாழ்கின்றன. இவை மிகவும் சுறுசுறுப்பாகத் தரையிலிருந்து நான்கு அடி உயரப் பகுதிகளில் காணப்படும். இவை பழுத்த பழங்களை உண்பதற்காக மரங்களின் உச்சிப்பகுதி வரை செல்லக்கூடியன. இவை சிதைந்த மற்றும் துண்டு துண்டான வாழ்விடங்களிலும் காணப்படுகின்றன.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Duckworth, J.W. (2017). "Dremomys rufigenis". IUCN Red List of Threatened Species 2017: e.T6824A22256057. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T6824A22256057.en. https://www.iucnredlist.org/species/6824/22256057. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Don E. Wilson, DeeAnn M. Reeder, Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference, Vol. 12 (2005), p. 780
- ↑ Can, D., H. Endo, N. Son, T. Oshida, L. Cahn, D. Phuong, D. Lunde, S. Kawada, A. Hayashida, M. Sasaki. 2008. Checklist of Wild Mammal Species of Vietnam. Kyoto: Shoukadoh.
- ↑ Duckworth, J. 2017. "Dremomys rufigenis" (On-line). The IUCN Red List of Threatened Species 2017. Accessed May 10, 2019 at https://www.iucnredlist.org/species/6824/22256057#taxonomy.
- ↑ Duckworth, J., R. Salter, K. Khounboline. 1999. "Wildlife in Lao PDR: 1999 Status Report" (On-line). Accessed May 10, 2019 at https://www.iucn.org/content/wildlife-lao-pdr-1999-status-report.
- ↑ Koyabu, D., T. Oshida, N. Dang, D. Can, J. Kimura, M. Sasaki, M. Motokawa, N. Son, A. Hayashida, Y. Shintaku, H. Endo. 2009. Craniodental mechanics and the feeding ecology of two sympatric callosciurine squirrels in Vietnam. Journal of Zoology, 279(4): 372-380.