ஆசிய நெடுஞ்சாலை 70
ஆசிய நெடுஞ்சாலை 70 அல்லது ஏஎச்70 (AH70), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். உக்ரைன், ரசியா நாடுகளுக்கு இடையிலான எல்லையில் இருந்து ஈரானின் பந்தர் அப்பாசு என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை ஆசியாக் கண்டத்தில் உள்ள நான்கு நாடுகளுக்கு ஊடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 4,832 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ஈரான் - 1,390 கிமீ
- காசாக்சுத்தான் - 993 கிமீ
- ரசியா - 462 கிமீ
- துருக்மெனிசுத்தான் - 499 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)