ஆசிய நெடுஞ்சாலை 78
ஆசிய நெடுஞ்சாலை 78 அல்லது ஏஎச்78 (AH78), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, துர்க்மெனிசுத்தானின் ஆசுகாபாத் என்னும் இடத்தில் இருந்து ஈரான் நாட்டில் உள்ள கெர்மான் என்னும் இடம் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை ஆசியாவின் இரண்டு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,076 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ஈரான் - 1.033 கிமீ
- துருக்மெனிசுத்தான் - 43 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)