ஆசுக்கார் நேக்ட்

ஆசுக்கார் இரைன்கார்ட் நேக்ட் (Oskar Reinhard Negt, டாய்ச்சு ஒலிப்பு: [ˈneːkt], 1 ஆகத்து 1934 – 2 பெப்ரவரி 2024) ஒரு செருமானிய மெய்யியலாளரும், சமூகத் திறனாய்வுக் கோட்பாட்டாளரும் ஆவார். இவர் அனோவர் லைப்னிட்சு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியராகவும், செருமனியின் மிக முக்கியமான சமூக அறிவியலாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.[1][2] இவரது படைப்புகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

2007 இல் நேக்ட்

நேக்ட் கோட்டிங்கன் பல்கலைக்கழகம், பிராங்க்ஃபுர்ட் பல்கலைக்கழகத்தில் மாக்சு கோர்க்கைமரிடம் மேற்குலகக் கோட்பாட்டைப் பயின்று அதில் முனைவர் பட்டத்தை தியோடர் ஆடோர்னோவின் வழிகாட்டலில் பெற்றார்.[3] திரைப்படத் தயாரிப்பாளரும் காட்சிக் கலைஞருமான அலெக்சாண்டர் குளூக் உடனான நீண்டகால ஒத்துழைப்புக்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[4]

நீண்டகாலமாக நோய்வாய்ப்பாட்டிருந்த நேக்ட் தனது 89-ஆவது அகவையில் 2024 பெப்ரவரி 2 இல் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Oskar Negt". Steidl Verlag (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
  2. Pohl, Kerstin; Hufer, Klaus-Peter (2016). "An Interview with Oskar Negt (2004)" (in en). International Labor and Working-Class History 90: 203–207. doi:10.1017/S0147547916000120. பன்னாட்டுத் தர தொடர் எண்:0147-5479. 
  3. "Adrian Grama, Negt without Kluge, NLR 123, May–June 2020". New Left Review. பார்க்கப்பட்ட நாள் 2020-07-08.
  4. Hottman, Tara (2015). "Message in a Bottle". Qui Parle 23 (2): 215–227. doi:10.5250/quiparle.23.2.0215. பன்னாட்டுத் தர தொடர் எண்:1041-8385. 
  5. "Oskar Negt ist gestorben" (in de). FAZ.NET. 2024-02-02. https://www.faz.net/aktuell/feuilleton/buecher/autoren/oskar-negt-ist-gestorben-19492964.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுக்கார்_நேக்ட்&oldid=3881785" இலிருந்து மீள்விக்கப்பட்டது