ஆச்சார்யா அரிகர் மண்டல புற்றுநோய் மையம்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள புற்றுநோய் மருத்துவமனை

ஆச்சார்யா அரிகர் மண்டல புற்றுநோய் மையம் (Acharya Harihar Regional Cancer Centre) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கட்டாக் நகரில் அமைந்துள்ளது. புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனையான இது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 25 மண்டல புற்றுநோய் மையங்களில் ஒன்றாகும். [1][2] கட்டாக்கில் உள்ள சிறீ இராமச்சந்திரா பாஞ்சா மருத்துவக் கல்லூரியின் கதிரியக்க சிகிச்சைத் துறையாக 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 அன்று இம்மையம் நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று ஒரு தன்னாட்சி அமைப்பாக மாற்றப்பட்டது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Regional Cancer Centres in the Country". Kidwai Memorial Institute of Oncology Official Website. Archived from the original on 7 November 2011. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
  2. "WHO India" (PDF). Archived from the original (PDF) on 2012-04-26.
  3. "Acharya Harihar Regional Cancer Centre". Official Website of Department of Health & Family Welfare, Government of Odisha. Archived from the original on 26 April 2012.