ஆச்சே அருங்காட்சியகம்

ஆச்சே அருங்காட்சியகம் (Aceh Museum) அல்லது பண்டா ஆச்சே மியூசியம் (Banda Aceh Museum) என்று பிரபலமாக அறியப்படும் ஆச்சே மாநில அருங்காட்சியகம் இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது இந்தோனேசியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆச்சே அருங்காட்சியகம்
Museum Aceh
ஆச்சே அருங்காட்சியகத்தின் பழைய பாரம்பரிய கட்ட்டடமும் (1914), புதிய கட்டடமும் (1974)
ஆச்சே அருங்காட்சியகம் is located in Aceh
ஆச்சே அருங்காட்சியகம்
இந்தோனேசியா, வடக்கு சுமாத்திரா, அச்சேயில் அமைவிடம்
ஆச்சே அருங்காட்சியகம் is located in Northern Sumatra
ஆச்சே அருங்காட்சியகம்
ஆச்சே அருங்காட்சியகம் (Northern Sumatra)
ஆச்சே அருங்காட்சியகம் is located in Sumatra
ஆச்சே அருங்காட்சியகம்
ஆச்சே அருங்காட்சியகம் (Sumatra)
ஆச்சே அருங்காட்சியகம் is located in இந்தோனேசியா
ஆச்சே அருங்காட்சியகம்
ஆச்சே அருங்காட்சியகம் (இந்தோனேசியா)
நிறுவப்பட்டதுஆகத்து 31, 1915
அமைவிடம்சுல்தான் அலாய்தின் மகுமுத்சியா சாலை, பண்டா ஆச்சே 23241
ஆள்கூற்று5°32′55″N 95°19′14″E / 5.548581°N 95.320642°E / 5.548581; 95.320642
வகைஇனவியல் அருங்காட்சியகம்
வலைத்தளம்museum.acehprov.go.id

வரலாறு

தொகு

குடியேற்றக் காலம்

தொகு
 
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், காலனித்துவ கொய்தராட்ஜா நகரில் அச்சே அருங்காட்சியகம்

ஆச்சே அருங்காட்சியகத்தின் முதலில் அமைந்திருந்த அசல் கட்டிடம் ஒரு பாரம்பரிய அச்சென்னீஸ் மேடை வீடு ( அச்சென்னீஸ் ரூமோ ஆச்சே ) வடிவத்தினைப் போன்று இருந்தது. இந்த கட்டிடம் முதலில் 1914 ஆகஸ்ட் 13 ஆம் நாள் முதல் நவம்பர் 15 ஆம் நாள் வரை செமரங்கில் உள்ள டி கொலோனியேல் டென்டூன்ஸ்டெலிங் (காலனித்துவ கண்காட்சி) எனப்படுகின்ற காலனித்துவ மைதானத்தில் ஆச்சே பெவிலியனாக பயன்படுத்தப்பட்டு வந்தது.[1] ஆரம்பத்தில் பரவலாக இருந்த நோக்கம் இந்த மேடை வீடு போன்ற அமைப்பில் உள்ள வீடு அங்கிருந்து அகற்றப்பட்டு நெதர்லாந்திற்கு மாற்றப்படும் என்பதே ஆகும்.

அது அமைந்துள்ள பெவிலியனில் ஆச்சேனிய கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களில் பெரும்பாலான காட்சிப் பொருள்கள் பிரெடெரிக் ஸ்டாம்மேஷாஸ் என்பவரின் தனிப்பட்ட தொகுப்பாக இருந்தது. தன் சேகரிப்புகளைக் கொண்டு அருங்காட்சியகம் வைத்திருந்த இவர் 1915 ஆம் ஆண்டில் ஆச்சே அருங்காட்சியகத்தின் முதல் காப்பாட்சியர் என்ற பொறுப்பினை ஏற்றார். அப்போது நடைபெற்ற கண்காட்சியின் போது, ஆச்சே பெவிலியன் மிகவும் சிறந்த பெவிலியன் என்ற நிலையைப் பெற முடிந்தது. சிறந்த பெவிலியன் என்ற வெற்றியின் காரணமாக, ஸ்டாம்மேஷாஸ் ஆச்சேவின் சிவிக் மற்றும் இராணுவ ஆளுநர் முன்பு எச்.என்.ஏ. திட்டத்திற்கான ஒரு முன்மொழிவினை வைத்தார். அதனைத் தொடர்ந்து பெவிலியனை மீண்டும் ஆச்சேவுக்குக் கொண்டு வந்து அதை ஒரு அருங்காட்சியகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

 
ஆச்சே அருங்காட்சியகத்தின் முதல் காப்பாட்சியரான பிரெடெரிக் ஸ்டாம்மேஷாஸ், உடன் பங்லிமா போலெம் II

பின்னர் இந்த கட்டிடம் ஆச்சேவில் உள்ள, தற்போது பண்டா ஆச்சே என்று அழைக்கப்பட்டு வருகிற கோயதராட்ஜாவிக்கு மாறியது, ஆகஸ்ட் 31, 1915 ஆம் நாள் முதல் முதல், கோயரட்ஜாவின் எஸ்ப்ளேனேட் என்ற இடத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது, அருங்காட்சியகத்தின் முதல் காப்பாட்சியாளர் என்ற பொறுப்பினை ஸ்டாம்மேஷாஸ் ஏற்றுக்கொண்டார். முதல் பொறுப்பினை ஏற்ற அவர் 1933 ஆம் ஆண்டு வரை அருங்காட்சியகத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து வந்தார்.[2]

பணி நிறைவு பெற்ற பின்னர், ஸ்டாம்மேஷாஸ் தனது தனிப்பட்ட தொகுப்புகளைக் கொண்டு அமைந்திருந்த, 1,300 இனவழிப் பொருட்களை நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் அமைந்துள்ள காலனித்துவ நிறுவனத்திற்கு விற்றார். தற்போது அது டிராபென்மியூசியம் ஆகும். இந்தத் தொகுப்பில் தங்க நகைகள், அச்சென்னீஸ் ஆயுதங்கள், தாயத்துக்கள், புகைப்படங்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தட்டு வந்த பாத்திரங்கள் உள்ளிட்ட ஆச்சே கலைப்பொருட்கள் இருந்தன. அவை பல சிறப்பான அம்ம்சங்களைக் கொண்டு அமைந்திருந்தன. டிராபென்மியூசியத்திற்கு விற்கப்பட்ட கலைப்பொருள்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது டேக்கு உமருக்குச் சொந்தமான தனிப்பட்ட அங்கி ஆகும். உமர், ஆச்சே போரின் போது டச்சுக்கு எதிரான கொரில்லாப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் [3][4]

விடுதலைக்குப் பிந்தைய காலம்

தொகு
 
ஆச்சேனிய பாரம்பரிய வீடு

இந்தோனேசியாவின் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்த அருங்காட்சியகம் ஆச்சே பிராந்திய அரசாங்கத்தின் சொத்தாக மாற்றம் பெற்றது. 1969 ஆம் ஆண்டில், டீக்கு ஹம்சா பெண்டஹாரா மேற்கொண்ட முன்முயற்சியின் காரணமாக, ஆச்சே அருங்காட்சியகம் பழைய இடத்திலிருந்து (பிளாங் பதாங்) 10,800 மீ 2 நிலத்தில் ஜலான் சுல்தான் அலைதீன் மஹ்முத்ஸ்யானில் உள்ள தற்போதைய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.[2]

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆச்சே அருங்காட்சியகம் ரூமோ ஆச்சே 2004 பூகம்பம் மற்றும் சுனாமியை எதிர்கொண்டது.

சேகரிப்புகள்

தொகு

ஆச்சே அருங்காட்சியகத்தின் அசல் சேகரிப்புகளில் உள்ள சில கலைப்பொருள்களை ஆம்ஸ்டர்டாமில் உள்ள டிராபென்மியூசியம் பராமரித்து வருகிறது, இதில் மிகவும் பிரபலமானது என்ற சிறப்பு பெற்றது டேக்கு உமரின் தனிப்பட்ட அங்கி ஆகும்.

தற்போது இந்த அருங்காட்சியகம் ஆச்சே தொடர்புடைய தொல்பொருள் பொருட்கள், ஆச்சேவிலிருந்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், இனவியல் பொருட்கள், பழைய கையெழுத்துப் பிரதிகள், இப்பகுதியைச் சார்ந்த கற்கள் மற்றும் தாதுக்கள், ஆச்செனிய பீங்கான், நாணயங்கள் மற்றும் ஆச்சே இராச்சியத்தைச் சேர்ந்த முத்திரை மற்றும் வரலாற்று ஓவியங்களை தன் சேகரிப்பில் கொண்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. Heel, M.G. van (1914). Gedenkboek van de Koloniale Tentoonstelling in Semarang 20 Augustus-22 November 1914. Batavia: Drukkerij Mercurius (twee delen).
  2. 2.0 2.1 "Museum Aceh". 2010. Museum Aceh. Archived from the original on பிப்ரவரி 2, 2013. பார்க்கப்பட்ட நாள் February 19, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. A.A.J.T. Stammeshaus (1977). Eens en voor altijd Atjeh. Uit de nagelaten memoires van F.W. Stammeshaus. Amsterdam: Uitgeverij Centraal Venster.
  4. Kempees (1905). De Tocht van overste van Daalen door de Gajo-, Alas- en Bataklanden van 8 Februari tot 23 Juli 1904. Amsterdam: J.C. Dalmeijer.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சே_அருங்காட்சியகம்&oldid=3778711" இலிருந்து மீள்விக்கப்பட்டது