ஆஜில் மென்பொருள் விருத்தி
அஜில் மென்பொருள் விருத்தி என்பது ஒரு மென்பொருள் விருத்தி முறையியல் ஆகும். இது கூட்டாக, தாமாக ஒழுங்கு செய்து, மடக்கு முறையில் விருத்திப் பணிகளை செய்யும் முறையாகும். அதிக நேரம் ஆவணப்படுத்தலிலும் வடிவமைப்பிலும் செலுத்தாமல், வேகமாக வேலை செய்யும் பகுதிகளை உருவாக்கி, ஒருங்கிணைத்து, இலக்கை நோக்கி முன்னேறுவது அஜில் முறையின் பண்பாகும். மடக்கு முறையில் விருத்திப் பணிகள் நடைபெறுவதால் மாற்றங்களை செய்வது இலகுவாகிறது.
கொள்கைகள்
தொகுஅஜில் மென்பொருள் விருத்தி என்பது பல தரப்பட்ட கூறுகளைக் கொண்டது. 2001 வெளியிடப்பட்ட ஆவணம் இந்த முறையின் கொள்கைகள் பலவற்றை எடுத்துரைப்பதில் ஒரு முக்கியமானதாகும்.
- மனிதர்கள், ஊடாட்டம் எதிர் முறைவழியாக்கம், கருவிகள்
- வேலை செய்யும் மென்பொருள் எதிர் முழுமையான ஆவணங்கள்
- பயனர் கூட்டாக்கம் எதிர் ஒப்பந்த பேச்சுவார்த்தை
- மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல் எதிர் திட்டத்தை பின்பற்றல்