ஆடம்சைட்டு-(Y)
கார்பனேட்டுக் கனிமம்
ஆடம்சைட்டு-(Y) (Adamsite-(Y)) என்பது NaY(CO3)2•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். முன்னதாக இக்கனிமத்தின் அனைத்துலக கனிமவியல் சங்கத்தின் குறியீடு ஐ.எம்.ஏ. 1999-020 என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. சோடியம், இட்ரியம், கார்பன், ஆக்சிசன் மற்றும் ஐதரசன் ஆகிய தனிமங்களின் கனிமமாக ஆடம்சைட்டு அறியப்படுகிறது. மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலவியல் பேராசிரியர் பிராங் தாவ்சன் ஆடம்சு (1859-1942) கண்டுபிடித்த காரணத்தால் ஆடம்சைட்டு என்ற பெயர் கனிமத்திற்குச் சூட்டப்பட்டது. இக்கனிமத்தின் மோவின் அளவுகோல் கடினத்தன்மை மதிப்பு 3 ஆகும்.
ஆடம்சைட்டு-(Y) | |
---|---|
கனடாவில் கிடைத்த ஆடம்சைட்டு கனிமத்தின் பட்டகத்தன்மையான வெண் படிகங்கள். | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | NaY(CO3)2•6H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முச்சாய்வு |
மோவின் அளவுகோல் வலிமை | 3.0 |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆடம்சைட்டு-(Y) கனிமத்தை Ads-Y[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.