ஆடி (இயற்பியல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆடி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Mirror) என்பது அதன் ஒரு மேற்பரப்பாவது ஒளியைத் தெறிக்குமாறு அமைந்துள்ள ஒரு பொருள் ஆகும். ஆடிகள் பல வகைகளாக உள்ளன. இவற்றுள் மிகவும் பொதுவான புழக்கத்தில் உள்ளது, தளவாடி ஆகும். தட்டையான மேற்பரப்பைக் கொண்ட இது அதற்கு முன்னுள்ள பொருட்களின் விம்பங்களை அதே அளவில் தெளிவாகக் காட்ட வல்லது. வளைந்த பரப்புக்களைக் கொண்ட ஆடிகளும் உள்ளன. இவ்வாறான ஆடிகள் பிம்பங்களைப் பெருப்பித்து அல்லது சிறிதாக்கிக் காட்டுவதுடன், ஒளிக் கற்றைகளைக் குவிக்கும் வல்லமையும் கொண்டவை. இதனால் இவை, இவ்வியல்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களில் பயன்படுகின்றன.
ஆடிகளின் வகைகள்தொகு
தளவாடிதொகு
தளவாடிகள் வீடுகளிலும், பிற இடங்களிலும் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுவதைக் காண முடியும். முக்கியமாக முகம் பார்க்கும் கண்ணாடிகளாகக் கழுவறைகள், ஒப்பனை அறைகள் போன்ற இடங்களில் பொருத்தப்படுகின்றன. சிறிய அல்லது ஒடுங்கிய இடங்களைப் பெரிதுபோல் காட்டுவதற்கு அல்லது அதன் குறுகல் தன்மை தோற்றாமல் இருப்பதற்கு சுவர்களில் பெரிய தளவாடிகளைப் பொருத்துவது உண்டு.