ஆடுதின்னாப்பாலை

ஆடுதின்னாப்பாலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
[Magnoliid]
வரிசை:
[Piperales]
குடும்பம்:
[Aristolochiaceae]
பேரினம்:
[Aristolochia]
இனம்:
A. tagala
இருசொற் பெயரீடு
Aristolochia tagala

ஆடுதின்னாப்பாலை அல்லது ஆடுதீண்டாப்பாலை (Aristolochia tagala, Indian birthwort; "இடச்சுக்காரர் குழாய்" எனவும் அழைக்கப்படும்.[1]) என்பது ஒரு மூலிகைத் தாவரமாகும். ஆடு தின்னாத அளவுக்குக் கசப்புத்தன்மை உடையதால் ஆடுதின்னாப்பாலை, ஆடுதீண்டாப்பாலை என்னும் பெயர்கள் வழங்கலாயின.[2] வாரம் எனும் பெயரும் இதற்குள்ளது. எட்டித் தழையையும் மேயும் வெள்ளாடுகூட கறித்துப் பார்த்துவிட்டுத் தின்னாமல் ஒதுக்கி வாரம் செய்வதால் இந்தச் செடிக்கு வாரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

பரம்பல்

தொகு

இது பரவலாகக் காணப்படுகிறது. இதன் பரம்பல் இமயமலை முதல் இலங்கை வரை தென்கிழக்காசியா (மியன்மர், இந்தோனேசியா, இந்தோசீனா, தாய்லாந்து உட்பட) சீனா, ஓசியானியா (மேலேசியா, சொலமன் தீவுகள், அவுத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வரை) ஆகிய இடங்களில் காணப்படுகிறது[1]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 Wee Yeow Chin. "Aristolochia tagala". Nature Watch. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  2. இரா. மதிவாணன் (1993). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முதன்மடலம்-இரண்டாம் பாகம் (ஆ, இ, ஈ). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். p. 58.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதின்னாப்பாலை&oldid=3622885" இலிருந்து மீள்விக்கப்பட்டது