ஆடு புலி ஆட்டம்

(ஆடுபுலியாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆடு புலி ஆட்டம் அல்லது குழை எடு ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது.

ஆடு புலி ஆட்டம்
ஆடுபுலி விளையாட்டு அரங்கக் கோடுகள்
வகை(கள்)பலகை விளையாட்டு
விளையாடுவோர்2
அமைப்பு நேரம்< 1 நி
விளையாட்டு நேரம்< 1 மணி
தற்போக்கு வாய்ப்புஇல்லை
தேவையான திறமைஉத்தி
ஆடுபுலி கட்டம்
குழை எடு ஆட்டம் மையான அமைப்பு

இது மிகவும் எளிய விளையாட்டு. ஒரு வட்டத்தினுள்ளே குழை இருக்கும். வட்டம் ஏறைக்குறைய 50 யாட் விட்டம் கொண்டது. வட்டத்திற்கு அப்பால் எல்லை கோடுகள் உண்டு. படத்தை பார்க்கவும். யாரவது ஒருவர் வட்டத்துக்குள் இருக்கும் குழையை எடுத்துக்கொண்டு தன் பக்கம் மற்றவர் தொட முதல் ஓடி விட வேண்டும். மாட்டிக் கொண்டால் அவர் ஆட்டமிழப்பார்.

ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.

சங்கப்பாடல் இதனை ‘வங்கா வரிப்பாறை’ என்று குறிப்பிடுகிறது.[1] இந்தியாவின் பிற பகுதிகளிலும் விளையாடப்படும் இவ்வாட்டம் வெவேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. இது சிறுபாடு விளையாட்டு என்பது தமிழர் கொள்கை.

விவரம்

தொகு

பாறை அல்லது திண்ணையில் கோடு போட்ட அரங்கம். முக்கோணக் கூம்புக் கோடு. கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆடுகள் என்னும் பெயரில் 15 சிறு காய்கற்கள். புலி என்னும் பெயரில் 3 சற்றே பெரிய காய்கற்கள். கோடுகள் ஆடும் புலியும் ஓடும் வழிகள். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். புலிக்காய்கள் உச்சியில் ஒன்றும் அடுத்த சந்திகளில் இரண்டுமாக முதலில் வைக்கப்பட்டிருக்கும். ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திகளில் இறங்கும். ஒரு ஆடு இறங்கியதும் புலி அடுத்த சந்திக்கு நாலாப்பக்கமும் நகரும். நகரும்போது அடுத்த சந்தியில் ஆடு இருந்து அடுத்த நேர்த்திசைச் சந்தி காலியாக இருந்தால் புலியை வெட்டிவிட்டுத் தாவும். இவ்வாறு புலி தாவ இடம் இல்லாமல் ஆடு புலியைக் கட்டவேண்டும். எல்லா ஆடுகளும் இறங்கிய பின்னர் ஆடும், புலியும் மாறி மாறி நகர்த்தப்படும். புலி நகரமுடியாமல் ஆடுகள் புலியைக் கட்டிவிட்டால் ஆட்டுக்கு வெற்றி. எல்லா ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலிக்கு வெற்றி. இதுதான் ஆட்டம்.

காட்சியகம்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
    செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
    விளையாடு இன் நகை (நற்றிணை 341)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடு_புலி_ஆட்டம்&oldid=3232754" இலிருந்து மீள்விக்கப்பட்டது