ஆட்டுக்கால் கிழங்கு
ஆட்டுக்கால் கிழங்கு (Drynaria quercifolia) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் ஆட்டுக்கால் என்றும் அழைக்கின்றனர். இக்கிழங்குகள் பார்ப்பதற்குக் கம்பளி போர்த்தியதுபோல மெல்லிய இழைகளுடன் ஆட்டுக்கால் போன்றே காணப்படும்.
ஆட்டுக்கால் கிழங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Drynaria |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/DrynariaD. quercifolia
|
இருசொற் பெயரீடு | |
Drynaria quercifolia (L.) J. Sm.; Hook. Journ. Bot. 3: 398 (1841)[1] |
பரவல்
தொகுஇவை இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ளன
மருத்துவ குணம்
தொகுஇந்தக் கிழங்கைக் கொண்டு கொல்லிமலையில் சூப் செய்யப்படுகிறது இந்த சூப்பின் சுவை அப்படியே ஆட்டுக்கால் சூப்பின் சுவையை ஒத்ததாக இருக்கும். மேலும் இக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இதனால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hassler, Michael & Swale, Brian. "Family Drynariaceae, genus Drynaria; world species list". Checklist of World Ferns. Archived from the original on 17 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ டாக்டர் வி. விக்ரம்குமார் (24 திசம்பர் 2016). "மருந்தாகும் 'சைவ ஆட்டுக்கால்'". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2016.