ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ

பால்ட்டிக் செருமானிய வானியலாளர்

ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ (Otto Wilhelm von Struve) (மே 7, 1819 (Julian calendar: ஏப்பிரல் 25) – ஏப்பிரல் 14, 1905) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். உருசிய மொழியில் இவர் பெயர் வழக்கமாக, ஆத்தோ வாசில்யேவிச் சுத்ரூவ (Otto Vasil'evich Struve) (Отто Васильевич Струве) என அமைகிறது. இவரது தந்தையார், [[பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம் வான் சுத்ரூவ]வும் இவரும் 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளர்களாக்க் கருதப்படுகின்றனர். இவர் 1862 முதல் 1889 வரை புல்கொவோ வான்காணகத்தின் தலையேற்றிருந்தார். இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் முன்னணி உறுப்பினராக விளங்கினார்.

ஆட்டொ விகெல்ம் வான் சுத்ரூவ

சொந்தவாழ்க்கையும் இறுதிக் காலமும்

தொகு
 
தன் குடும்பத்துடன் சுத்ரூவ (இரண்டாம் இடது). எர்மன் சுத்ரூவ வலதில் இருந்து மூன்றாவதாக உள்ளார்.


தகைமைகளும் விருதுகளும்

தொகு

இவர் 1840 இல் வெளியாகிய "சூரியக் குடும்பத்தின் சீரியக்கத்தின் தலையாட்ட மாறிலியைத் தீர்மானித்தல்" எனும் ஆய்வுரைக்காக 1950 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தை வென்றார் .[1][2] இவர் 1852 முதல் 1889 வரை சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராக இருந்தார்.அதேகாலத்தில் இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தில் உறிப்பினராக இருந்து, 1856 இல் அதன் கல்வியியலாலரானார். இவர் 1874இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினரானார்.[3] குறுங்கோள் 768 சுத்ரூவீனா ஆட்டொ வில்கெல்ம், பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், எர்மன் சுத்ரூவ ஆகியோரின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது;[4] நிலாவின் சுத்ரூவ குழிப்பள்ளம் வேறு மூன்று சுத்ரூவ குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அழைக்கப்படுகிறது:அதாவது. பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், ஆட்டோ விகெல்ம், ஆட்டோ சுத்ரூவ ஆகியோரின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. சுத்ரூவ புவியளவை வில் (Struve Geodetic Arc) 2005 இல் உலக மரபுப் பட்டியலில் சேர்க்கபட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr. Otto Von Struve". Nature 72 (1855): 61. 1905. doi:10.1038/072061a0. Bibcode: 1905Natur..72Q..61.. 
  2. "Astronomy and the Struve Family". Nature 154 (3902): 206. 1944. doi:10.1038/154206a0. Bibcode: 1944Natur.154Q.206.. 
  3. "O.W. von Struve (1819 - 1905)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  4. Lutz D. Schmadel (2003). Dictionary of minor planet names. Springer. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-00238-3.
  5. Struve Geodetic Arc, UNESCO

மேலும் படிக்க

தொகு