ஆணியல் பெண்
ஆணியல் பெண் (Tomboy) என்பது ஒரு ஆணின் இயல்பான குணியியல்புகள் இருப்பதாகக் காணப்படும் அல்லது வெளிக்காட்டும் பெண்களை குறிக்கும். குறிப்பாக இந்த ஆணியல் பெண்களிடன் உடை, நடை, அலங்காரம் ஆண்களைப் போன்றே இருக்கும். சிலரது குரலும் ஆண் தன்மையுடைவையாகவும் காணப்படுகின்றன.
ஒரு "ஆணியல் பெண்" எப்போதும் ஒரு ஆணை பார்த்து சலனப் படுபவராக இருக்க மாட்டார். ஆண்களை "அடே நண்பா" என்று அழைத்து தானும் ஒன்றாக ஆண்களுடன் இணைந்து விளையாட்டு முதல் அனைத்து செயல்பாடுகளிலும் இணைந்து பங்குபற்றுவோர்களாகக் காணப்படுவார். இதையறியாத ஆண்கள் அவர்களை சாதாரணப் பெண்களாக நினைத்து பழக முற்படுகையில் சிக்கல் உருவாகின்றது. அவ்வாறான நிலையில் ஆண்களுடன் உறவு நிலையை விரும்பாத ஆணியல் பெண்கள் ஒதுங்கிக்கொள்வதனையும் காணக்கூடியதாக உள்ளது.
சொல் விளக்கம்
தொகுஆங்கிலத்தில் பேச்சு வழக்கில் ஒரு சொல் ("Tomboy" ) இருப்பினும், ஆங்கில அகராதிகளில் வேறு விளக்கம் ("A boyish girl") கொடுக்கப்பட்டுள்ளது[1].
இல்லறவாழ்வு
தொகுஇவ்வாறான பெண்கள் ஆண்களுடனான இல்லற வாழ்வை விரும்புவதில்லை. இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் இவ்வாறானவர்களின் இயல்பு தன்மை காணப்படாததால் அல்லது புறக்கணிக்கப்படுவதால் ஆண்களுடன் ஏற்படுத்திவைக்கும் இல்லற வாழ்வில் சிக்கல்களும் தோன்றுகின்றன. சில மேற்கத்தைய நாடுகளில் இவ்வாறானவர்களில் குணயியல்புகள் பரீசிலிக்கப் பட்டு இவர்களையும் சமூகத்தில் சமமானவர்களாக மதித்து, அவர்களின் விருப்புக்கமைய உறவு வைத்துக்கொள்ளும் இன்னொரு பெண்ணுடனான உறவை மனிதநேய அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. இவ்வாறு ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே திருமணங்களும் தற்காலத்தில் நடைபெற்று வருகின்றன.
நாடுகளில் ஏற்புநிலை
தொகுஐக்கிய நாடுகள் சட்டத்திலும் இவர்களுக்கான அங்கீகாரம் உள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளில் இவ்வாறான ஆணியல் பெண்களின் உறவு வாழ்க்கை முறை சட்டவிரோதமாக பார்க்கப்படுவதால், அவர்கள் தமது கோரிக்கையை ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் அதற்கான பிரிவில் முறையிடுவதன் ஊடாக, கோரிக்கைகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
தொலைக்காட்சியில்
தொகுஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா என்ற தொடர் ஆணியல் பெண்ணின் வாழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் தொடர் ஆகும்.