ஆண்குறி புற்றுநோய்

ஆண்குறி புற்றுநோய் என்பது ஆண்குறியின் திசுக்களில் காணப்படும் ஓர் புற்றுத்திசு வளர்ச்சியாகும். சிசின் மொட்டு அல்லது முன்தோலில் ஏற்படும் செதிள் உயிரணு புற்றுநோய், பத்தில் ஒன்பது முறைக் காணப்படும் மிகவும் பரவலான நோயாகும்.[1] ஆண்குறி புற்றுநோய் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மிக அரிதாக, இலக்கத்தில் ஒருவருக்கு,ஏற்படுகிறது.ஐக்கிய அமெரிக்க நாட்டில் ஆண்களிடையே காணப்படும் புற்றுநோய்களில் 0.2% ஆகவும் ஆண்களில் புற்றுநோயால் இறப்பவர்களில் 0.1% ஆகவும் ஆண்குறி புற்றுநோய் உள்ளது. ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆண்களின் புற்றுயோயில் 10% வரை இந்நோய் உள்ளது. [2]

அறிகுறிகள்

தொகு

சிவத்தல், எரிச்சல், ஆண்குறியில் புண் அல்லது வீக்கம் . இத்தகைய அறிகுறிகள் உள்ள எவரும் மருத்துவ ஆலோசனை பெறுதல் உடனடித் தேவையாகும்.[3]

நோய்குறியியல்

தொகு
  • A. புற்றுநோய்க்கு முன்பான தோலுறுப்புக் கோளாறு
  • B. உள்ளிட புற்றுநோய்
  • C. ஆண்குறியில் பரவும் புற்றுநோய்

நோய்நிலைகள்

தொகு

பிற புற்றுத்திசு வளர்ச்சிகளைப் போன்றே ஆண்குறி புற்றுநோயும் உடலின் பிற பகுதிகளுக்குப் பரவும். இது பொதுவாக தன்னிடத்தில் துவங்கி உடலின் பிற பகுதிகளுக்குப் பரவும் முதன்மை புற்றுநோய் ஆகும். உடலின் பிறபகுதிகளில் உருவாகி ஆண்குறியைத் தாக்கும் இரண்டாம்நிலை புற்றுநோயல்ல. மருத்துவர்கள் புற்றுநோயின் இடம் மாறலைக் கொண்டு நோய்நிலையை மதிப்பிடுகிறார்கள். நோய்நிலைக்குத் தகுந்தவாறு அவர்களது சிகிச்சை முறையும் முன்னறிதல் முறைகளும் அமைகின்றன. நோய்நிலைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன:

  • நோய்நிலை I - புற்றுநோய் ஆண்குறியின் சிசின்மொட்டு அல்லது முன்தோலை மட்டும் தாக்கியுள்ளது.
  • நோய்நிலை II - புற்றநோய் ஆண்குறியின் உள்ளேயும் தாக்கியுள்ளது.
  • நோய்நிலை III - புற்றுநோய் ஆண்குறியையும் சுற்றியுள்ள நிணநீர்க் கணுக்களையும் தாக்கியுள்ளது.
  • நோய்நிலை IV - புற்றுநோய் கவட்டைப் பகுதியையும் மீறி உடலின் பிற பகுதிகளுக்குப் பரவியுள்ளது.
  • மீட்கை - சிகிச்சைக்குப்பிறகு மீண்டும் வந்துள்ள புற்றுநோய்.

நோய் குணமடைதல் கணிப்பு,நோயாளியின் நோய்நிலைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் பெரிதும் வேறுபடும். பொதுவாக, எவ்வளவு விரைவாக ஒருவரது நோய் அறியப்படுகிறதோ அந்தளவு நோயிலிருந்து குணமடையும் வாய்ப்பு பெருகும். அனைத்துநிலை ஆண்குறி புற்றுநோய்க்கும் ஐந்து ஆண்டுகள் உயிர்வாழும் எதிர்பார்ப்பு 50% ஆகும்.

சூழிடர் காரணிகள்

தொகு

ஆண்குறி புற்றுநோய் வருவதற்கான காரணம் முழுவதுமாக அறியப்படவில்லை. அமெரிக்க புற்றுநோய் சங்கம் பின்வருவனவற்றை சூழிடர் காரணிகளாகக் கூறுகிறது:[4] மனித கழலை தொற்றுயிரி நோய் (HPV) பரவல், புகைத்தல், குறிமெழுகு(smegma), முன்தோல் சுருக்கம்(phimosis), சிரங்கிற்கு புற ஊதா விளக்குகள் மூலமான சிகிச்சை,வயது மற்றும் எய்ட்சு. மற்ற நோய்க்காரணமாக சுகாதாரக்குறைவு கூறப்படுகிறது. முன்தோலில் வரக்கூடிய ஓர் படையும் (en:balanitis xerotica obliterans) சூழிடர் காரணியாக தற்போது அறியப்பட்டுள்ளது.[5]

விருத்த சேதனம்

தொகு

ஆண் விருத்த சேதனம் இந்தப் புற்றுநோயைத் தடுக்க உதவுவது குறித்து மருத்துவ உரையாடல்கள் தொடர்கின்றன.

விருத்த சேதனம் செய்யாத ஆணின் ஆயுட்கால சூழிடர் குறித்து ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 600க்கு ஒருவருக்கு ஆண்குறி புற்றுநோய் வரக்கூடியதாக அறியப்பட்டுள்ளது.[6] இருப்பினும் இந்த ஆய்வு விமரிசிக்கப்பட்டுள்ளது.[7] பல ஆய்வுகள் இளம்குழந்தையாக இருக்கும்போதே விருத்தசேதனம் செய்யப்படாத ஆண்களின் சூழிடர் கூடுதலாக உள்ளதாகவும் முன்தோல் உள்ளவருக்கு 3.2[8] மற்றும் 22[9] கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும் முன்தோல் இல்லாதவர்களுக்கு 0.41 என்றும் காட்டுகின்றன.[10] பல மருத்துவ எழுத்தாளர்களும் இதனை ஆதரிக்கின்றனர்.[11][11][12][13][14] மேலும் சில ஆய்வுகள் விருத்தசேதனம் செய்த ஆண்களுக்கு HPV நுண்ணுயிர் பரவல் வாய்ப்புக் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன.[15][16][17]விருத்த சேதனம் ஆண்குறி புற்றுநோயை தடுக்கவில்லை என்று உறுதிசெய்த ஆய்வினை வாலர்சுடைன் செய்தார். அவ்வாய்வில் சப்பான், நார்வே மற்றும் சுவீடன் போன்ற விருத்த சேதனத்தில் ஈடுபடாத நாடுகளில் ஆண்குறி புற்றுநோய்க்கான வாய்ப்பு அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவில் உள்ளதைப் போலவே ஒரு இலக்கத்தில் ஒன்றாக (100,000 இல் 1) இருப்பதை கண்டறிந்துள்ளார்.[18]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cancer Research UK: Types of penile cancer". பார்க்கப்பட்ட நாள் 2008-06-24.
  2. "ACS :: What Are the Key Statistics About Penile Cancer?". Archived from the original on 2007-10-30. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.
  3. "Penis Cancer". Archived from the original on 2008-07-01. பார்க்கப்பட்ட நாள் 2008-06-24.
  4. "ACS :: What Are the Risk Factors for Penile Cancer?". Archived from the original on 2007-12-22. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.
  5. "bmj.com Rapid Responses for Rickwood et al., 321 (7264) 792-793". Archived from the original on 2008-05-13. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.
  6. Kochen M, McCurdy S (1980). "Circumcision and the risk of cancer of the penis. A life-table analysis". Am. J. Dis. Child. 134 (5): 484–6. பப்மெட்:7377156. 
  7. Ronald L. Poland (1990). "The question of routine neonatal circumcision". The New England Journal of Medicine 22 (18): 1312–1315. http://www.cirp.org/library/general/poland/. 
  8. Maden C, Sherman KJ, Beckmann AM, et al. (1993). "History of circumcision, medical conditions, and sexual activity and risk of penile cancer". J. Natl. Cancer Inst. 85 (1): 19–24. doi:10.1093/jnci/85.1.19. பப்மெட்:8380060. 
  9. Schoen EJ, Oehrli M, Colby C, Machin G (2000). "The highly protective effect of newborn circumcision against invasive penile cancer". Pediatrics 105 (3): E36. doi:10.1542/peds.105.3.e36. பப்மெட்:10699138. 
  10. Tsen HF, Morgenstern H, Mack T, Peters RK (2001). "Risk factors for penile cancer: results of a population-based case-control study in Los Angeles County (United States)". Cancer Causes Control 12 (3): 267–77. doi:10.1023/A:1011266405062. பப்மெட்:11405332. 
  11. 11.0 11.1 Dillner J, von Krogh G, Horenblas S, Meijer CJ (2000). "Etiology of squamous cell carcinoma of the penis". Scand J Urol Nephrol Suppl 34 (205): 189–93. doi:10.1080/00365590050509913. பப்மெட்:11144896. 
  12. Gajalakshmi CK, Shanta V (1993). "Association between cervical and penile cancers in Madras, India". Acta Oncol 32 (6): 617–20. doi:10.3109/02841869309092439. பப்மெட்:8260177. 
  13. Sánchez Merino JM, Parra Muntaner L, Jiménez Rodríguez M, Valerdiz Casasola S, Monsalve Rodríguez M, García Alonso J (2000). "[Epidermoid carcinoma of the penis]" (in Spanish; Castilian). Arch. Esp. Urol. 53 (9): 799–808. பப்மெட்:11196386. 
  14. Schoeneich G, Perabo FG, Müller SC (1999). "Squamous cell carcinoma of the penis". Andrologia 31 Suppl 1: 17–20. பப்மெட்:10643514. 
  15. Castellsagué X, Bosch FX, Muñoz N, et al. (2002). "Male circumcision, penile human papillomavirus infection, and cervical cancer in female partners". N. Engl. J. Med. 346 (15): 1105–12. doi:10.1056/NEJMoa011688. பப்மெட்:11948269. 
  16. Baldwin SB, Wallace DR, Papenfuss MR, Abrahamsen M, Vaught LC, Giuliano AR (2004). "Condom use and other factors affecting penile human papillomavirus detection in men attending a sexually transmitted disease clinic". Sex Transm Dis 31 (10): 601–7. பப்மெட்:15388997. 
  17. Svare EI, Kjaer SK, Worm AM, Osterlind A, Meijer CJ, van den Brule AJ (2002). "Risk factors for genital HPV DNA in men resemble those found in women: a study of male attendees at a Danish STD clinic". Sex Transm Infect 78 (3): 215–8. doi:10.1136/sti.78.3.215. பப்மெட்:12238658. 
  18. Wallerstein E (February 1985). "Circumcision. The uniquely American medical enigma". Urol. Clin. North Am. 12 (1): 123–32. பப்மெட்:3883617. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்குறி_புற்றுநோய்&oldid=3824620" இலிருந்து மீள்விக்கப்பட்டது