ஆண்டனி தெக்கேக்

இந்திய நடிகர்

தம்பி ஆண்டனி என்று நன்கு அறியப்பட்ட ஆண்டனி தெக்கெக் (Antony Thekkek) ஓர் இந்திய-அமெரிக்கத் திரைப்பட நடிகரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார்.[1] மலையாள நடிகர் பாபு ஆண்டனியின் மூத்த சகோதரரான இவர் ஒரு எழுத்தாளராக மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் கூனம்பாரா கவுண்டி, லைஃப் ஆஃப் ஊசோ, லேடி பைக்கர் மற்றும் வாஸ்கோ டா காமா போன்ற பல புதினங்களை எழுதியுள்ளார். ஒரு நடிகராக, இவர் முதன்மையாக மலையாளத் திரைப்படத்துறையில் தீவிரமாக உள்ளார்.[2] வாஸ்கோ டா காமா என்ற தனது புத்தகத்திற்காக பஷீர்-அம்மா மலையாள விருதை வென்றுள்ளார்.

ஆண்டனி தெக்கேக்
பிறப்புபொன்குன்னம், கேரளம், இந்தியா
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • எழுத்தாளர்
உறவினர்கள்பாபு ஆண்டனி (சகோதர்ர்)

ஆரம்பகால வாழ்க்கை.

தொகு

தம்பி ஆண்டனி கேரளாவின் பொங்குன்னத்தில் ஒரு கேரள கிறித்துவ குடும்பத்தில் பிறந்தார். கட்டிடக்கலை நிபுணரான இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து 3 தசாப்தங்களுக்கும் மேலாக சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் வசித்து வருகிறார்.[3]

தனது இளைய சகோதரர் பாபு ஆண்டனி கதாநாயகனாக நடித்த அரேபியா படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல அமெரிக்க மற்றும் இந்திய தயாரிப்புகளில், முக்கியமாக மலையாள மொழியில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் அஞ்சல் இயக்கிய பியாண்ட் தி சோல் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் ‘டாக்டர் ஆச்சார்யா’ வேடத்தில் நடித்ததற்காக ஹொனலுலு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். 2010 ஆம் ஆண்டில், ஹாலிவுட் திரைப்படமான கேஷ் (2010 திரைப்படம்) என்ற படத்தில் நடித்தார்.

‘கயல் பிலிம்ஸ்’ என்ற பதாகையின் கீழ் படங்களைத் தயாரித்துள்ளார்.[4].

மேற்கோள்கள்

தொகு
  1. "ഹോളിവുഡില്‍ മലയാളിക്കൊരു കസേര , Interview - Mathrubhumi Movies". Archived from the original on 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.
  2. "On a creative expedition". 6 August 2019.
  3. "A success story in acting". தி இந்து (Chennai, India). 9 April 2006 இம் மூலத்தில் இருந்து 20 September 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060920210336/http://www.hindu.com/2006/04/09/stories/2006040911390300.htm. 
  4. "Parudeesa produced by Thampy Antony under the banner of Kayal films". The Hindu (Kerala India). 25 October 2012. http://www.thehindu.com/features/cinema/a-question-of-faith/article4030564.ece. 

கூடுதல் ஆதாரங்கள்

தொகு

6 https://english.manoramaonline.com/entertainment/entertainment-news/2020/03/07/eelam-malayalam-movie-wins-award-golden-state-film-festival.html 7 https://www.americanbazaaronline.com/2020/03/19/malayalam-film-eelam-wins-award-at-golden-state-film-festival-440537/ https://www.eastbaytimes.com/2020/04/19/coronavirus-nursing-homes-with-covid19-deaths-have-history-of-serious-problems/

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டனி_தெக்கேக்&oldid=4098801" இலிருந்து மீள்விக்கப்பட்டது