ஆண்டிராபர்ட்சைட்டு
ஆர்சனேட்டு கனிமம்
ஆண்டிராபர்ட்சைட்டு (Andyrobertsite) என்பது KCdCu5(AsO4)4(H2AsO4)•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் நீல வண்ணத்துடன் கூடிய அணைவு ஆர்சனேட்டு கனிமமாகும். நமீபியா நாட்டின் திசுமெப் நகரச் சுரங்கத்தில் இக்கனிமம் காணப்படுகிறது. கனடாவின் நில அளவையியல் துறை கனிமவியலாளர் ஆண்ட்ரூ சி. ராபர்ட்சின் (1950 பிறப்பு) நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இக்கனிமத்தின் பகுதிப்பொருட்களில் ஒன்றான காட்மியத்திற்குப் பதிலாக கால்சியம் மிகுந்துள்ள ஒத்த கனிமம் கால்சியோநீரிலிபெர்ட்சைட்டு ஆகும். இது அதிகமான பச்சை நிறத்துடன் காணப்படுகிறது [2].
ஆண்டிராபர்ட்சைட்டு Andyrobertsite | |
---|---|
நீரிலிராபர்ட்சைட்டு (நீலம்) மற்றும் கால்சியோநீரிலிராபர்ட்சைட்டு (பச்சை) நிறைவகை மாதிரிகளின் கலவை; அளவு: 3.3×2.2×1.0 மி.மீ | |
பொதுவானாவை | |
வகை | ஆர்சனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | KCdCu5(AsO4)4(H2AsO4)•2H2O |
இனங்காணல் | |
நிறம் | நீலம் |
படிக இயல்பு | தட்டுபோல |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
பிளப்பு | {100} நன்று |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | கண்ணாடித்தன்மை |
கீற்றுவண்ணம் | வெளிர் நீலம் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 4 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.72, nβ = 1.749, nγ = 1.757 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.037 |
மேற்கோள்கள் | [1][2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Andyrobertsite. Mindat.org
- ↑ 2.0 2.1 Andyrobertsite. Webmineral.com