ஆண்ட்ராய்டு ஒன்று
ஆண்ட்ராய்டு ஒன்று (Android One) ஆண்ட்ராய்டு இயங்குதள அமைப்புக்களுக்காக கூகிளால் உருவாக்கப்பட்டுள்ள ஓர் சீர்தர மென்பொருளாகும். ஆண்ட்ராய்டு ஒன்று இயங்கும் நுண்ணறிபேசிகளில் இயங்கும் மென்பொருட்கள் ஆண்ட்ராய்டு அடிப்படை மென்பொருளுக்கு அண்மித்து இருக்கும். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.[1] மேலும் நுண்ணறிபேசிக்கான வன்பொருள் வடிவமைப்பையும் கூகிள் சீர்தரப்படுத்தியுள்ளதால் தயாரிப்பாளர்கள் தன்மயப்படுத்தவோ ஆண்ட்ராய்டுக்காக வடிவமைக்கவோ தேவையில்லை.[2]
தங்கள் முதல் நுண்ணறிபேசியை வாங்கவிருக்கும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு, முதன்மையாக வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைக்காக ஆண்ட்ராய்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கநிலையில் 2014இல் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்சு மற்றும் தெற்காசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.[3]