ஆண்ட்ராய்டு 11
ஆண்ட்ராய்டு 11 என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதினெட்டாவது பதிப்பும் பதினொன்றாவது முக்கிய வெளியீடும் ஆகும். [1]ஆண்ட்ராய்டின் இந்த நகர்பேசி இயங்குதள பதிப்பினை ஓப்பன் ஆண்ட்செட்டு அலையன்சு கூகுள் நிறுவனத்தின் கீழ் உருவாக்கி உள்ளனர். [2] செப்டம்பர் 8, 2020 இல் வெளியான ஆண்ட்ராய்டு 11, தற்போது வரையில் வெளியாகி இருக்கும் பதிப்புகளில் சமீபத்தியது ஆகும்.[3]
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு | |
பிக்சல் 4ஏ திறன்பேசியில் ஆண்ட்ராய்டு 11 | |
விருத்தியாளர் | கூகுள் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | ஆண்ட்ராய்டு இயங்குதளம் |
பொது பயன்பாடு | செப்டம்பர் 8, 2020 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 11.0.0_r31 (RQ1D.210205.004) [4] |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | android |
கூறுகள்
தொகுபயனர் அனுபவம்
தொகுசெயலிகளின் இசைவு பெறுவதன் மூலம் ஆண்ட்ராய்டு பதினொன்றில் உரையாடல் வசதியை குமிழிகளின் வடிவில் பயன்படுத்தி கொள்ளலாம். [5]அவ்வாறே, முக்கியமான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைப்புகளை மாற்றும் இடத்து, அப்படிப்பட்ட உரையாடல்கள் அறிவிப்புகளில் முதலில் வருவதைக் காணலாம். கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் காட்டப்பட்ட அனைத்து அறிவிப்புகளையும் ஒருசேர பார்க்கும் அறிவிப்பு வரலாறு என்கிற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திறன்பேசியை அணைக்க மற்றும் துவக்க பயன்படும் 'பவர்' பொத்தானை அழுத்திப் பிடித்தால் தெரியும் விருப்பங்களில், இப்போது வீட்டு சாதனங்களை எளிமையாக இயக்க வழிவகுக்கும் ஒரு பொத்தானும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பதினொன்றில் உள்கட்டமைக்கப்பட்ட ஒரு திரை பதிவியும் (ஸ்க்ரீன் ரெக்கார்டர்) வருகிறது. இந்த அம்சம் இதற்கு முற்பட்ட பதிப்புகளில் இல்லை.[6]
இயங்குதளம்
தொகு5ஜி தொழில்நுட்பத்தை ஏற்பிக்கும் வகையில் பல்வேறு செயலி நிரலாக்க இடைமுகங்களின் மூலம் ஆண்ட்ராய்டு 11 கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது சந்தைப்படுத்தப்படும் மடிக்கக் கூடிய வகையிலான அல்லது முடிவிலா திரைக் கொண்ட வளைந்த வகையிலான திறன்பேசிகளுக்கு ஏற்பவும் ஆண்ட்ராய்டு 11 வடிவமைக்கப்பட்டுள்ளது.[7]
சாதனத்தின் தட்பவெப்பத்தைக் கணிக்கவும் அதற்கேற்றவாறு செயலிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் புதுவகையான செயலி நிரலாக்க இடைமுகம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. காற்றலை பிழைத்திருத்தியையும் ஒருங்கே கொண்டுள்ளது ஆண்ட்ராய்டு 11.[8]
தனியுரிமை பாதுகாப்பு
தொகுபுதுப்பிப்பிற்கு பிறகும், செயலிகள் மீண்டும் எல்லாவற்றிற்கும் அனுமதி கேட்க தேவையில்லாத வகையில் ஆண்ட்ராய்டு 11 கட்டமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு 11, ஒருமுறை அனுமதி என்கிற கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உள்ளபடியால், ஒருமுறை ஒரு செயலிக்கு அனுமதியோ மறுப்போ அளிக்கப்பட்டு விட்டால், மீண்டும் அனுமதி கேட்டு அதனால் தொந்தரவு செய்ய முடியாது.[9]
பயனரின் இருப்பிடத்தை உளவு பார்த்தல், அவர்தம் தனிப்பட்ட தகவல்களைக் காண முயற்சித்தல் உள்ளிட்ட செய்கைகளை செயலிகள் செய்ய முடியாதவாறு ஆண்ட்ராய்டு 11 அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை வழங்கப்பட்ட அனுமதியை, பயனர் நீண்ட காலம் அந்த செயலியைப் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் திரும்பப் பெறும் உரிமையும் ஆண்ட்ராய்டு 11க்கு உள்ளது.[10]
ஒரு செயலி, திறன்பேசியின் கட்டமைப்புக்குள்ளோ உள்ளத்திய கோப்புகளுக்குள்ளோ நுழைய ஏகப்பட்ட கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது ஆண்ட்ராய்டு 11. அதற்கு மேலும் ஐயத்துக்கிடமான நடத்தைகள் உணரப்பட்டால், பயனரை எச்சரிக்கவோ செயலியை தானாகவே புகார் செய்யவோ உரிமை வழங்கப்பட்டுள்ளது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆண்ட்ராய்டு 11 பற்றி ஆண்ட்ராய்டு உருவாக்கர்களின் கட்டுரை (ஆங்கிலம்)".
- ↑ "வலைத்தளம் ஃஜி.டி.நெட்டில் ஆண்ட்ராய்டு 11 பற்றி வெளியான கட்டுரை (ஆங்கிலம்)".
- ↑ "ஆண்ட்ராய்டு 11 பற்றி கூகுளின் வலைப்பூவில் வெளியான தகவல் (ஆங்கிலம்)".
- ↑ "ஆண்ட்ராய்டு 11 வெளியீடு பற்றிய தகவல் (ஆங்கிலம்)". Google Git. பார்க்கப்பட்ட நாள் October 24, 2020.
- ↑ "ஆண்ட்ராய்டு 11 இன் அம்சங்கள் பற்றி தி வெர்ஜ் என்கிற வலைத்தளத்தில் வெளியான செய்தி (ஆங்கிலம்)".
- ↑ "தி பி.சி வேர்ல்ட் என்கிற வலைத்தளத்தில் ஆண்ட்ராய்டு 11 பற்றி வெளியான செய்தி (ஆங்கிலம்)".
- ↑ "செயலி நிரலாக்க இடைமுகங்கள் பற்றிய ஆண்ட்ராய்டு உருவாக்கர்களின் வலைப்பூ செய்தி (ஆங்கிலம்)".
- ↑ "5ஜி தொழில்நுட்பம் குறித்து ஆண்ட்ராய்டு உருவாக்கர்களின் வலைப்பூ கட்டுரை (ஆங்கிலம்)".
- ↑ "ஆண்ட்ராய்டு உருவாக்கர்களின் வலைத்தளத்தில் திறன்பேசியின் நடத்தை மாறுதலைப் பற்றி வெளியான கட்டுரை (ஆங்கிலம்)".
- ↑ "ஆண்ட்ராய்டு 11 இல் தனியுரிமை (ஆங்கிலம்)".
- ↑ "ஆண்ட்ராய்டு உருவாக்கர்களின் வலைப்பூவில் பாதுகாப்பு பற்றிய கட்டுரை (ஆங்கிலம்)".