ஆண்ட்ரூசு நூலகம்

இந்தியாவின் குசராத்து மாநில நூலகம்

ஆண்ட்ரூசு நூலகம் [2] (Andrews Library) இந்தியாவின் குசராத்து மாநிலம் சூரத்து நகரத்தில் 1850 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பழமையான நூலகமாகும்.

ஆண்ட்ரூசு நூலகம்
Andrews Library
தொடக்கம்1 சூலை 1850[1]
அமைவிடம்சூரத்து, குசராத்து
Collection
அளவு18,000 [2]
ஏனைய தகவல்கள்
இயக்குநர்சூரத் நன்புரா பார்சி அஞ்சுமன் அறக்கட்டளை

வரலாறு

தொகு

ஆண்ட்ரூசு நூலகம் 1850 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நூலகத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதியான ஆண்ட்ரூசின் பெயர் வைக்கப்பட்டது. ஆண்ட்ரூசுடன் நகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பாலும் பங்களித்த பணக்கார முத்து வியாபாரியான இராவ் பகதூர் நாகின்சந்த் இயாவேரியும் இப்பணியில் இணைந்து நிறுவினார். [3] [4]

தொகுப்புகள்

தொகு

நூலகத்தில் கலை மற்றும் வரலாற்றில் சில அரிய படைப்புகள் உள்ளன. இந்த இலக்கியம், அறிவியல், வணிகம், பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான நூல்களையும் நூலகம் வழங்குகிறது. உள்ளூர் மக்களுக்கு பல மொழிகளில் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை வழங்குகிறது. 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் சுமார் 25,000 நூலகப் புத்தக சேகரிப்புகளை அழித்தது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "History".
  2. 2.0 2.1 2.2 Thomas, Melvyn Reggie (15 July 2016). "Andrews Library to soon go digital". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/surat/Andrews-Library-to-soon-go-digital/articleshow/53218765.cms. பார்த்த நாள்: 20 June 2018. 
  3. "Andrews Library: The testimony of Surat's legacy".
  4. Handbook of Research on Inventive Digital Tools for Collection Management and Development in Modern Libraries.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூசு_நூலகம்&oldid=3751516" இலிருந்து மீள்விக்கப்பட்டது