ஆண் முலை வீக்கம்
ஆண் மார்பு வீக்கம் (Gynecomastia) என்பது ஆண்களில் இயல்புக்கு மாறாக முலைகள் பெரிதாக வளர்ச்சி அடைவதாகும். இது சாதாரணமாக குழந்தைகள், பருவ வயதடைந்தோர், முதியோர் ஆகியோரில் இயல்பாகக் காணப்படும். பருவ வயது வந்த பையன்களுக்கு இது மன உளைச்சலைத் தரக் கூடியது. பெரும்பாலான பையன்களில் இந்நிலை ஓரிரு வருடங்களுக்குள் சரியாகி விடும். ஆண்முலை வீக்கத்தின் காரணம் துல்லியமாகத் தெரியவில்லை. பால் ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. மருந்துகள், உடல் நோய்கள் போன்றவை இச்சமநிலையை உண்டாக்குகின்றன.[1][2][3]
ஆண் முலை வீக்கம் Classification and external resources | |
ஐ.சி.டி.-10 | N62. |
---|---|
ஐ.சி.டி.-9 | 611.1 |
DiseasesDB | 19601 |
MedlinePlus | 003165 |
ஈமெடிசின் | med/934 |
காரணங்கள்
தொகுமருந்துகள்
தொகுஅக்காலத்தில் வயிற்றுப்புண்ணுக்குத் தரப்பட்ட சிமெட்டிடின் (தற்போதைய ரானிட்டிடின் மருந்தின் முன்னோடி) ஆண்முலை வீக்கத்தையும் ஆண்மையிழப்பையும் உண்டாக்கக் கூடியது. டிஜாக்சின், (இதயச் செயலிழப்பிற்குத் தரப்படும் மருந்து) கஞ்சா, மார்ஃபின், ஸ்பைரனோலாக்டோன், வின்கிறிஸ்டின் போன்ற மருந்துகளும் ஆண்முலை வீக்கத்தை உண்டாக்குபவை.
கல்லீரல் நோய்கள்
தொகுகல்லீரலில் தான் ஈஸ்ட்ரோஜனின் (estrogen) சிதைமாற்றம் நடைபெறும். எனவே கல்லீரல் செயலிழப்பு நேரும் போது ஈஸ்ட்ரோஜன் மிகுந்து ஆண் முலை வீக்கம் ஏற்படுகிறது.
இயக்குநீர் சமநிலையின்மை நிலைகள்
தொகுஅட்ரினல் கட்டி
அக்ரோமெகலி
புரோலாக்டினோமா
குஷிங்க் நோய்
தொழு நோய்
தொகுதொழு நோயில் இரண்டு விரைகளும் அழிந்து விடுவதால் இயல்பான டெஸ்டோஸ்டீரோன் சுரப்பு இல்லாமல் போய் ஈஸ்ட்ரோஜன் மிகுந்து ஆண் முலை வீக்கம் ஏற்படும்
மருத்துவம்
தொகுமேலே கூறியது போல பெரும்பாலான வளர் இளம் பருவ ஆடவருக்கு சில வருடங்களில் இந்நிலை சரியாகி விடும். ஆனால் இது உள்ளே மறைந்திருக்கும் கொடிய வியாதியின் ஒரே அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புண்டு. வெப்ஸ்டர் அறுவைசிகிச்சை எனும் அறுவை சிகிச்சை அழகியல் காரணங்கள் பொருட்டு இந்நோய் நிலைக்காகச் செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gynaecomastia | Definition of Gynaecomastia by Oxford Dictionary on Lexico.com". Lexico Dictionaries | English (in ஆங்கிலம்). OxfordDictionaries.com. Archived from the original on 8 March 2021. பார்க்கப்பட்ட நாள் 17 November 2020.
- ↑ "Definition of Gynecomastia". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 November 2020.
- ↑ Iuanow, Elaine; Kettler, Mark; Slanetz, Priscilla J. (March 2011). "Spectrum of Disease in the Male Breast". American Journal of Roentgenology 196 (3): W247–W259. doi:10.2214/AJR.09.3994. பப்மெட்:21343472.