ஆதல் சிங் காஞ்சனா

இந்திய அரசியல்வாதி

ஆதல் சிங் காஞ்சனா (Adal Singh Kansana) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு சுமாவலியிலி தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் பகுசன் சமாச்சு கட்சியின் உறுப்பினராகவும் 2008 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் தேர்தலில் போட்டியிட்டு மத்திய பிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டின் மத்தியப் பிரதேச அரசியல் நெருக்கடியின் போது, இவர் மூத்த காங்கிரசு தலைவர் சோதிராதித்ய சிந்தியாவை ஆதரித்தார். பதவி விலகல் செய்து பின்னர் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராக இருந்தார். [1] [2] [3] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jyotiraditya Scindia resigns from Congress, more than 20 party MLAs quit". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jyotiraditya-scindia-resigns-from-congress/articleshow/74561583.cms. பார்த்த நாள்: 30 August 2020. 
  2. "22 rebel Cong MLAs, whose resignation led to fall of Kamal Nath govt, join BJP". https://www.livemint.com/politics/news/22-rebel-cong-mlas-whose-resignation-led-to-fall-of-kamal-nath-govt-join-bjp-11584797981690.html. 
  3. "Why the Congress continues to lose MLAs in MP". பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
  4. "Why the Congress continues to lose MLAs in MP". பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதல்_சிங்_காஞ்சனா&oldid=3817039" இலிருந்து மீள்விக்கப்பட்டது