ஆதித்தமிழன்

ஆதித்தமிழன் என்னும் இதழ் தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி என்னும் நகரில் இருந்து திங்கள்தோறும் வெளிவருகிறது. இது சு. நடராசன் என்பவரால் 2011 பிப்ரவரி திங்களில் தொடங்கப்பட்டது. ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரப்புவதற்காக இவ்விதழ் வெளியிடப்படுகிறது. வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமைப் போராளி! என்பது இவ்விதழின் முத்திரைத்தொடர் ஆகும்.

ஆதித்தமிழன்  
துறை தலித் உரிமை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: அ.வினோத்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் சு. நடராசன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: திங்கள் இதழ்

ஆசிரியர் குழு

தொகு

ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளரான அ. வினோத் என்பவரே இவ்விதழின் ஆசிரியர் ஆவார். சு. நடராசன் என்பவர் இதழின் பதிப்பாசிரியராகவும் கா. சா. சரவணன், யாக்கன் என்போர் ஆசிரியர் குழு உறுபினர்களாகவும் பணியாற்றுகின்றனர்.[1]

சான்றடைவு

தொகு
  1. ஆதித்தமிழன், அறிவு:2 ஆயுதம்:6, சூலை 2012, பக்.01
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தமிழன்&oldid=2573856" இலிருந்து மீள்விக்கப்பட்டது