ஆதிலட்சுமி சிவகுமார்

ஆதிலட்சுமி சிவகுமார் சமூகமுனைப்புள்ள ஈழத்துப் பெண் எழுத்தாளர், மற்றும் பாடலாசிரியர். வன்னி மண்ணிலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், விமர்சனங்கள், நாடகங்கள் என்று பல தளங்கிலும் ஒரு சமூகவிடுதலை நோக்கிய எழுத்துப்போராளியாக இயங்கிக் கொண்டிருந்தவர். 1990இலிருந்தே புலிகளின் குரல் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்தவர். தற்சமயம் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

ஆதிலட்சுமி சிவகுமார்
பிறப்புஆதிலட்சுமி
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

எழுத்துலக வாழ்வுதொகு

1982 லிருந்து எழுதிவரும் இவர் மே 20, 1982இல் 'உரிமையில்லா உறவுகள்' என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக ஆதிலட்சுமி இராசையாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். இவரது படைப்புகள் எரிமலை, வெளிச்சம், ஈழநாதம், சுட்டும் விழி, சரிநிகர், ஞானம், வைகறை, வெள்ளிமலை, கவிதை, நாற்று, யாத்ரா போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. இன்றும் பல ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.[1][2][3][4][5][6]

வெளிவந்த நூல்கள்தொகு

 • புயலை எதிர்க்கும் பூக்கள் (1990, சிறுகதைத்தொகுப்பு)
 • என் கவிதை (2000, கவிதைத்தொகுப்பு)
 • மனிதர்கள் (2006, கிளிநொச்சி, சிறுகதைத்தொகுப்பு)
 • புள்ளிகள் கரைந்த பொழுது (2018, நாவல்)[7][8]

இவரது பாடல்கள் இடம்பெற்ற இறுவெட்டுகள் சிலதொகு

 • வானம் தொடும் தூரம்[9]
 • கடற்கரும்புலிகள் பாகம் 07[10]

இவரது கதைகளிலிருந்து உருவான சில குறும்படங்கள்தொகு

 • வேலி[11] (இயக்கம்: நிமலா, தயாரிப்பு: தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.)
 • உண்மை[12] (இயக்கம்: ரகுபாப், நிதர்சனம், தமிழீழம்)

பரிசுகள்/விருதுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

மேற்சான்றுகள்தொகு

 1. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0 %AF%8D_2000.09.17
 2. http://noolaham.net/project/117/11656/11656.pdf
 3. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_1995.08-09
 4. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_1995.04-05
 5. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_2004.10
 6. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_2001.10-12
 7. ஈழப் போர் இலக்கியம்- புள்ளிகள் கரைந்தபொழுது – நாவல் வெளியீட்டு நிகழ்வு, அதிரன், http://eelamnews.co.uk, Jul 8, 2018
 8. http://aavanaham.org
 9. http://thesakkatru.com/doc6139.html
 10. http://thesakkatru.com/doc5371.html
 11. http://thesakkatru.com/doc8921.html
 12. http://thesakkatru.com/doc9054.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிலட்சுமி_சிவகுமார்&oldid=3003166" இருந்து மீள்விக்கப்பட்டது