ஆதி அண்ணாமலையார் கோயில்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்

ஆதி அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் அமைந்துள்து. [2] [3] இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது.[2] இச்சிவாலயம் அண்ணாமலையார் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. [2] இக்கோயிலை அடி அண்ணாமலையார் கோயில் என்றும் அழைப்பர். [4]

இறைவன், இறைவி

தொகு

இத்தலத்தின் மூலவர் ஆதி அண்ணாமலையார் என்றும், அம்பாள் ஆதி அபிதகுசலாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[2]

பிற சன்னதிகள்

தொகு

திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுகப் பெருமான் மற்றும் எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன. இக்கோயிலில் அங்க மண்டபம் உள்ளது. அத்துடன் உண்ணாமலை எனும் தீர்த்தமும் அமைந்துள்ளது. [2]

பிற சிறப்புகள்

தொகு

இத்தலத்திலிருந்து அருணாசலேஸ்வரரை பார்ப்பதை சிவயோக முக தர்ஷன் என்று அழைக்கின்றனர்.[2] திருமூலர் இந்த தலத்திருந்து அவ்வாறு தரிசித்துள்ளாக கூறப்படுகிறது. [2] மாணிக்கவாசகர் திருவெம்பாவை இத்தலத்தில் இயற்றியுள்ளார். இத்தலத்திற்கு வருகின்ற வழியில் மாணிக்கவாசருக்கான கோயிலும் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "அருள்மிகு ஆதி அண்ணாமலையார் திருக் கோவில் - அடி அண்ணாமலையார் (திருவண்ணாமலை)".
  3. "ஆதி அருணாசலேஸ்வரர் கோயிலில் பாலாலய விழா".
  4. "திருவண்ணா மலை கிரிவலம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_அண்ணாமலையார்_கோயில்&oldid=3732408" இலிருந்து மீள்விக்கப்பட்டது