ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோயில்
ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுவைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் மணல்மேட்டினை அடுத்து, பந்தநல்லூர் சாலையில் திரும்பி கேசிங்கன் என்னும் ஊருக்கு அருகில் வலது புறத்தில் ஆத்தூர் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் மந்தாரவனேசுவரர் என்றும் சொர்ணபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி அஞ்சனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். [1]
சிறப்பு
தொகுநந்தி பூசித்த, தவளை முத்தி பெற்ற தலம் என்ற பெருமைகளை உடையது. மந்தார வனம் என்பதே மந்தாரம் ஆயிற்று என்பர். [1]