ஆந்திரப் பிரதேச சம்பர்க் கிராந்தி அதிவிரைவுவண்டி

ஆந்திர பிரதேச சம்பர்க் கிராந்தி அதிவிரைவு ரயில். ஒரு தெற்கு மத்திய ரயில்வேயினைச் சேர்ந்த ரயிலாகும். இது புது டெல்லிக்கும் திருப்பதிக்கும் இடையே செயல்படுகிறது. சம்பார்க் கிராந்தி அதிவிரைவு ரயில் தொடரில் இதுவும் ஒரு ரயிலாகும். மிகவும் அதிக தூரம் பயணத்தினைக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருப்பதனால் அதிவிரைவுச் சேவையாக இது செயல்படுகிறது. இந்த ரயில் சேவை இந்தியாவின் தலைநகரான புது டெல்லியினை, பிற மாநிலங்களின் தலைநகருடன் இணைக்கிறது.

பெயர்க் காரணம்

தொகு
 
ஆந்திர பிரதேச சம்பர்க் கிராந்தி அதிவிரைவு

சம்பர்க், கிராந்தி ஆகிய வார்த்தைகள் சமஸ்கிருத மொழியில் இருந்து எடுக்கப்பட்டவை. சம்பர்க் என்பதற்கு தொடர்புபடுத்துதல் என்பதும், கிராந்தி என்பதற்கு அடுத்தடுத்த செயல்முறைகள் என்பதும் பொருளாகும். இரண்டு வார்த்தைகளையும் இணைத்திருப்பதன் மூலம் “அடுத்தடுத்த செயல்முறைகள் மூலம் இந்தியாவில் உள்ள நகரங்களை, இந்திய தலைநகருடன் தொடர்புபடுத்துவது” எனும் பொருள்படும்படி வைத்துள்ளனர். குறிப்பிட்ட அளவிலான நிறுத்தங்களை வழங்குவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். இதேபோல் ராஜதானி அதிவிரைவு ரயில் செயல்பட்டாலும் அதில் குளிர்சாதன வசதி இருப்பதால், அதன் ரயில் கட்டணம் அதிகம், ஆனால் இந்த ரயில் சேவையில் ரயில் கட்டணம் குறைவு.

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்:

தொகு
எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம்

கடந்த

தொலைவு

நாள்
1 திருப்பதி

(TPTY)

தொடக்கம் 05:40 0 0 கி.மீ 1
2 ரேணிகுண்டா சந்திப்பு(RU) 06:00 06:05 5 நிமி 10 கி.மீ 1
3 கடப்பா

(HX)

07:58 08:00 2 நிமி 135 கி.மீ 1
4 எர்ரகுண்ட்லா

(YA)

08:34 08:35 1 நிமி 174 கி.மீ 1
5 தாடிபத்ரி

(TU)

09:44 09:45 1 நிமி 244 கி.மீ 1
6 தோன்

(DHNE)

12:05 12:10 5 நிமி 347 கி.மீ 1
7 கர்னூல்

நகரம் (KRNT)

13:02 13:04 2 நிமி 400 கி.மீ 1
8 கட்வால்

(GWD)

14:04 14:05 1 நிமி 456 கி.மீ 1
9 மஹபூப்நகர்

(MBNR)

15:04 15:06 2 நிமி 531 கி.மீ 1
10 காச்சிகுடா

(KCG)

16:48 16:50 2 நிமி 636 கி.மீ 1
11 செகந்திராபாத் சந்திப்பு(SC) 17:35 17:55 20 நிமி 644 கி.மீ 1
12 காசீபேட் சந்திப்பு(KZJ) 19:48 19:50 2 நிமி 775 கி.மீ 1
13 ராம்குண்டம்

(RDM)

20:44 20:45 1 நிமி 868 கி.மீ 1
14 மஞ்சேரல்

(MCI)

20:59 21:00 1 நிமி 882 கி.மீ 1
15 பெல்லம்பள்ளி

(BPA)

21:09 21:10 1 நிமி 901 கி.மீ 1
16 சிர்பூர்

ககஸ்நகர் (SKZR)

21:44 21:45 1 நிமி 940 கி.மீ 1
17 நாக்பூர்

(NGP)

02:00 02:10 10 நிமி 1221 கி.மீ 2
18 போபால் சந்திப்பு (BPL) 08:05 08:15 10 நிமி 1610 கி.மீ 2
19 ஜான்சி சந்திப்பு(JHS) 12:00 12:10 10 நிமி 1901 கி.மீ 2
20 தில்லி ஹஸ்ரத் நிசாமுதீன் (NZM) 18:00 முடிவு 0 2303 கி.மீ 2

இதேபோல் வண்டி எண் 12708 ஹஸ்ரத் நிசாமுதீன் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, திருப்பதி வரை சென்றடையும்.[1]

வண்டி எண் 12707

தொகு

இது செகந்திரபாத் சந்திப்பில் இருந்து ஹஸ்ரத் நிசாமுதீன் சந்திப்பு வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 68 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 1659 கிலோ மீட்டர் தொலைவினை 24 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 222 ரயில் நிறுத்தங்களில், 8 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 6 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு மணிநேரம் மற்றும் 8 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் பெட்டிகளின் அடுக்கு விவரம் பின்வருமாறு: L – SLR – GS – GS – A1 – B4 – B3 – B2 – B1 – S1 – PC – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S8 – S9 – GS – SLR – SC [2]

வண்டி எண் 12708

தொகு

இது ஹஸ்ரத் நிசாமுதீன் சந்திப்பில் இருந்து செகந்திரபாத் வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 63 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 1659 கிலோ மீட்டர் தொலைவினை 26 மணி நேரங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 222 ரயில் நிறுத்தங்களில், 8 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக ஒரு நிமிடம் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக 51 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் பெட்டிகளின் அடுக்கு விவரம் பின்வருமாறு: L – SLR – GS – GS – A1 – B1 – B2 – B3 – B4 – S1 – PC – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S8 – S9 – GS – SLR - SC[3]

குறிப்புகள்

தொகு
  1. "Andhra Pradesh Sampark Kranti Express Train Route/Schedule". railroutes.in. Archived from the original on 2015-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  2. "Andhra Pradesh Sampark Kranti Express Train 12707". cleartrip.com. Archived from the original on 2015-10-11. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  3. "Andhra Pradesh Sampark Kranti Express Train". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.