ஆந்திரூ இலிடில்

பிரித்தானிய வானியற்பியலாளர், அண்டவியலாளர்

ஆந்திரூ ஆர். இலிடில் (Andrew R. Liddle) (பிறப்பு: 1965 ஜூன் 9) எடின்பர்கு அரசு வான்காணகத்தில் 2013 இலிருந்து வானியற்பியல் பேராசிரியராகவும் எடின்பர்கு அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராகவும் உள்ளார். இவர் பல நூல்களையும் 260 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

ஆந்திரூ ஆர். இலிடில்
Andrew R. Liddle
பிறப்பு9 சூன் 1965 (1965-06-09) (அகவை 59)
கிளாசுக்கோ, இசுகாட்லாந்து
தேசியம்இசுகாட்டியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்எடின்பர்கு அரசு வான்காணகம்
எடின்பர்கு பல்கலைக்கழகம்
சுசெக்சு பல்கலைக்கழகம்
இம்பீரியல் கல்லூரி, இலண்டன்
கல்வி கற்ற இடங்கள்கிளாசுக்கோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆர். கோர்டான் கவுசு

இவர் கோட்பாட்டு அண்டவியலாளர். இவர் நம் அண்டம் இயல்புகளை புரிந்துகொள்ள அடிப்படை இயற்பியல் விதிகளைப் பயன்கொள்கிறார்.

ஆராய்ச்சி

தொகு

இவரது ஆராய்ச்சி அண்டவியலிலும் வானியற்பியலிலும் பல்வேறு களங்களை உள்ளடக்குகிறது. இவர் குறிப்பாக புடவிக் கட்டமைப்பின் தோற்றமும் படிமலர்ச்சியும் பற்றி ஆர்வம் கொண்டுள்ளார். சிறப்பாக, இவரது ஆர்வம் உப்பல் அண்டவியல் படிமங்களும் நோக்கீட்டு கட்டுத்தளைகளும் பற்றியும் அண்ட நுண்ணலைப் பின்னணிக்கான இயற்பியல் பற்றியும் கவனம் செலுத்துகிறது, இவரது ஆய்வு இதற்கான அண்டவியல் ஆய்வுக் களங்களாக பால்வெளிக் கொத்துகளைப் பயன்படுத்துகிறது.

இவரது ஆய்வுப் புலங்களாவன:

  • புடவிக் கட்டமைப்பின் தோற்றமும் படிமலர்ச்சியும்
  • உப்பல் அண்டவியல் படிமங்களும் நோக்கீட்டு கட்டுத்தளைகளும்
  • அண்ட நுண்ணலைப் பின்னணிக்கான இயற்பியல்
  • புடவியில் கருப்பு ஆற்றல்

இவர் பிளாங்கு செயற்கைக்கோள், கருப்பாற்றல் அளக்கை, XMM பால்வெளிக் கொத்து அளக்கை ஆகிய பல பன்னாட்டு வானியல் ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

இவர் எடின்பர்கு அரசு வான்காணகப் பதவிக்கு முன்பு பிரைட்டனில் உள்ள சுசெக்சு பல்கலைக்கழக அண்டவியல் பேராசிரியராக இருந்தார்.

வெளியீடுகள்

தொகு

தகைமைகளும் விருதுகளும்

தொகு

இவர் 2015 இல் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரூ_இலிடில்&oldid=3952597" இலிருந்து மீள்விக்கப்பட்டது