ஆனந்தா பாய்

ஆனந்தா பாய் என்பவர் சென்னையின் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார். கேரளம், கர்நாடகம். ஆந்திரம் ஆகியவற்றின் பகுதிகள் அடங்கிய பழைய மதராஸ் மாகாண சட்டத் துறையில் முதன் முதலில் பட்டம் பெற்றவர் இவர். ஆனந்தா பாய் சென்னை பல்கலைக்கழகத்தில் 1928 இல் பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 1929 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். இதன் மூலம் சென்னையில் பயிற்சி பெற்ற முதல் பெண் வழங்கறிஞர் என்ற பெருமையை பெற்றார். கர்நாடகத்தில் உள்ள தென் கன்னட பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தா பாய். அவருடைய அப்பா கிருஷ்ண ராவ் பெண்கள் கல்வி பெற வேண்டுமென்பதில் உறுதி கொண்டவர்.[1][2]

மேற்கோள்தொகு

  1. நித்யா மேனன் (4 சனவரி 2015). "பெண் சக்தி: சட்டத்தின் முன்னோடிகள்". கட்டுரை. தி இந்து. 1 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "முதல் வழக்கறிஞர்". கட்டுரை. தி இந்து. 17 மார்ச் 2017. 1 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தா_பாய்&oldid=3576567" இருந்து மீள்விக்கப்பட்டது