ஆனந்த்ராஜ் அம்பேத்கர்
ஆனந்த்ராஜ் யஷ்வந்த் அம்பேத்கர் (Anandraj Yashwant Ambedkar) (பிறப்பு 2 ஜூன் 1967) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இந்திய சமூக ஆர்வலர், பொறியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் குடியரசுக் கட்சியின் சேனாவின் தலைவர் ஆவார். [1] [2] அவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் ஆவார். . சசமத்துவத்திற்கான நினைவுச்சின்னம் ஒன்றை பி. ஆர். அம்பேத்கரின் பெயரால் அமைப்பதற்கான நீண்டகால கோரிக்கையை எடுத்துக்காட்டுவதற்காக அவரது ஆதரவாளர்கள் 2011 இல் தாதரில் உள்ள இந்து ஆலை நிலத்தை ஆக்கிரமித்தனர். [3] [4] ஆனந்தராஜ் அம்பேத்கர் தனது மூத்த சகோதரர் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதியிலும் பணிபுரிகிறார் . [5] [6] [7]
ஆனந்த்ராஜ் அம்பேத்கர் | |
---|---|
குடியரசு சேனாவின் தலைவர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சூன் 1967 மும்பை, (தற்போதைய மும்பை, மகாராட்டிரம்), இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி |
|
துணைவர் | மனீஷா அம்பேத்கர் |
உறவுகள் |
|
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | • 129, ராஜக்ருகா, இந்து காலனி, தாதர், மும்பை, மகாராட்டிரம் |
தொழில் | பொறியாளர், அரசியல்வாதி, மற்றும் சமூகப்பணியாளர் |
வாழ்க்கை
தொகுஆனந்தராஜ் அம்பேத்கர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் ரமாபாய் அம்பேத்கரின் பேரன் ஆவார். இவரது தந்தையின் பெயர் யஷ்வந்த் அம்பேத்கர் (பயாசாகேப்), தாயின் பெயர் மீரா அம்பேத்கர். அவர் மனிஷா அம்பேத்கரை மணந்தார், இவருக்கு சாஹில் மற்றும் அமன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அம்பேத்கர் குடும்பம் நவாயண புத்த மதத்தைப் பின்பற்றுவர்கள் ஆவர். இவருக்கு பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் பீம்ராவ் அம்பேத்கர் என்ற இரண்டு சகோதரர்களும், ஆனந்த் டெல்டும்டேவை மணந்த ஒரு சகோதரி ரமாபாயும் உள்ளனர். [8]
கல்வி
தொகுஆனந்தராஜ் அம்பேத்கர் 10 ஆம் வகுப்பினை புனேவில் உள்ள ராஜா சிவாஜி பள்ளியில் இருந்து 1985 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார். 1987 இல், ருயா கல்லூரியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். பின்னர், 1991 இல், மும்பையில் வி.ஜே.டி.ஐ நிறுவனத்திலிருந்து மின் பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தார்.. 1993 ஆம் ஆண்டில், பஜாஜ் நிர்வாகவியல் கல்விக்கான நிறுவனத்தில் (மும்பை) பட்டம் பெற்றார்.
குறிப்புகள்
தொகு- ↑ "राजकीय आरक्षण काढून टाकावे – आनंदराज आंबेडकर". 12 April 2018.
- ↑ http://newindianexpress.com thesundaystandard/article328665.ece
- ↑ टिल्लू, रोहन (15 October 2019). "बाबासाहेब आंबेडकरांचं इंदू मिलमधलं स्मारक 2020 पर्यंत पूर्ण होणार का?" – via www.bbc.com.
- ↑ कोण्णुर, मयूरेश (6 October 2019). "महाराष्ट्र चुनाव: शिवाजी, आंबेडकर, बाल ठाकरे के स्मारकों पर राजनीति" – via www.bbc.com.
- ↑ "Maharashtra Assembly Election 2019 : भाजपने चुकीची धोरणे राबविली : आनंदराज आंबेडकर". Lokmat. 15 October 2019.
- ↑ "आमच्यासोबत यायचे की नाही हे काँग्रेसने ठरवायचे : आनंदराज आंबेडकर | eSakal". www.esakal.com.
- ↑ "शरद पवार यांनी आंबेडकरी चळवळीची पिढी बरबाद केली: आनंदराज आंबेडकर". Maharashtra Times. 4 April 2019.
- ↑ Masih, Niha (21 February 2019). "He is a prominent anti-Modi intellectual. The Indian government wants him behind bars".
Teltumbde has been swept up in a government crackdown on lawyers and activists. The activists targeted in the investigation are advocates for India's most disadvantaged communities, including indigenous tribal people and Dalits, once called 'untouchables.' They also are vocal critics of the government of Prime Minister Narendra Modi.