ஆனந்த மாலை என்னும்நூல் வீரை கவிராச பண்டிதர் என்பரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று.
காலம் 16-ஆம் நூற்றாண்டு.
இந்த நூலில் நாலடி விருத்தங்கள் 26 உள்ளன.
அவை ஒவ்வொன்றும் ‘ஆனந்த நாயகமே’ என்னும் தொடரில் முடிகிறது.

  • நூலின் 26-வது பாடலில் நூலாசிரியர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடலமைதி – எடுத்துக்காட்டு

நீதித் தனிக்கடலே நீ வருந்தப் பல்லுயிரைப்
பேதித் தறுசமயப் பித்தேற்ற வேண்டிற்றோ
சோதிக் கடவுளர்க்கும் தொல்மறைக்கும் எட்டாத
ஆதித் தனிப்பொருளே ஆனந்த நாயகமே

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_மாலை&oldid=4131741" இலிருந்து மீள்விக்கப்பட்டது