வீரை கவிராச பண்டிதர்
வீரை கவிராச பண்டிதர் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். வடமொழியிலும், தென்மொழியிலும் வல்லவர்.
இவர் பாண்டிய நாட்டின் பிரிவான சேதுநாட்டில் உள்ள ‘வீரசோழன்’ என்னும் ஊரில் பிறந்தவர். இந்த ஊர் ‘வீரை’ என மரூஉ மொழியால் வழங்கப்படும்.
வேப்பத்தூரில் வாழ்ந்த ‘சோழிய பிராமணர்’ பல தலைமுறைகளாகப் பெரும் பண்டிதர்களாக விளங்கினர். இவர்கள் வீரைக்கு வந்து குடியேறினர். அவர்களில் ஒருவர்தான் இந்த நூலாசிரியர்.
இவரது இயற்பெயர் தெரியவில்லை.
நாம் வழங்கும் பெயர் இவரது பட்டப்பெயர்.
- கன்னலஞ்சிலை வேள் எனும் கவிராச பண்டிதர் – என இவர், இவர் இயற்றிய சௌந்தரிய லகரி நூலில் குறிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- சௌந்தரிய லகரி (மொழிபெயர்ப்பு நூல்)
- ஆனந்த மாலை
- வராகி மாலை
- கலைஞான தீபம்
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005