வராகி மாலை
தமிழ் நூல்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வராகி மாலை என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு.
சிவனின் பாகம் சக்தி. சக்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு.
- அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி
இவர்களில் வாராகி என்பவளை இந்த நூல் வராகி என்கிறது.
வராகி உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம்.
இந்த நூலில் 32 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன.
- பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன.
பகைவனுக்குக் கொடுமையான தண்டனை வழங்குக எனக் கேட்டுக்கொள்ளும் 10 பாடல்கள் இதில் பிற்காலத்தில் மேலும் சேர்க்கப்பட்டுள்ளன.
பாடல்கள் சிறந்த நடையில் அமைந்துள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005