ஆனன் ஆறு

கிழக்கு ஆசியாவின் ஆறு

ஆனன்(மொங்கோலியம்: онон гол, உருசியம்: онон) மங்கோலியா மற்றும் உருசியாவில் ஓடுகின்ற நதி ஆகும். இது 818 கி. மீ. நீளம் மற்றும் 94,010 சதுர கி. மீ. பரப்பளவில் படுகையையும் கொண்டுள்ளது. இது கென்டீ மலைகளின் கிழக்கு அடிவாரத்தில் உருவாகிறது. இது 298 கி. மீ. தூரத்திற்கு மங்கோலியாவுக்குள் ஓடுகிறது. இது இங்கோடா நதியுடன் இணைந்து சில்கா நதியை உருவாக்குகிறது.[1]

ஆனன் ஆறு (Онон гол)
ஆனன் கோல்
ஆறு
செல்லப்பெயர்: இராணி தாய் ஆனன்
நாடுகள் மங்கோலியா, உருசியா
ஐமக்குகள் கென்டீ
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் கிழக்கு கென்டீ மாகாணம்
கழிமுகம் சில்கா ஆறு
நீளம் 817 கிமீ (508 மைல்)
வடிநிலம் 94,010 கிமீ² (36,297 ச.மைல்)

ஆனன்-சில்கா-அமுர் நீர் அமைப்பு உலகின் பத்து நீண்ட ஆறுகளில் ஒன்றாகும். இது 818 கி. மீ. + 560 கி. மீ. + 2,874 கி. மீ. நீளமுடையது.

வரலாறு

தொகு
 
மேல் ஆனன் நதி, செங்கிஸ் கானின் பிறப்பிடமாகக் கருதப்படும் இடத்திற்கு அருகில்.
 
அமுருடன் இணையும் சில்காவுடன் ஆனன் இணைகிறது

மேல் ஆனன் என்பது செங்கிஸ் கான் பிறந்து வளர்ந்த இடமாகக் கூறப்படும் பகுதிகளில் ஒன்றாகும்.

மங்கோலியர்களின் இரகசிய வரலாறு இவ்வாறு தொடங்குகிறது: "போர்டே சோனோ இவ்வுலகத்திற்கு வந்தான் (நீல-சாம்பல் ஓநாயாக) அவன் விதி கடவுளின் எண்ணப்படி இருந்தது. அவனது மனைவி ஒரு "குவா மரல்" (அழகான பெண் மான்). அவர்கள் உள்நாட்டு கடல் வழியாகப் பயணம் செய்தனர். அவர்கள் ஆனன் ஆறு உற்பத்தியாகும் இடத்தில் புர்கான் கல்துன் பார்வையில் படும்படி முகாமிட்ட போது, அவர்களது முதல் மகன் பாத் திசகன் பிறந்தான்".[2][3]

மேலும் காண்க

தொகு


[[Category:{{{category}}}]]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனன்_ஆறு&oldid=4132971" இலிருந்து மீள்விக்கப்பட்டது