ஆனின் பேரரசர் வு

ஹானின் பேரரசர் வு (எளிய சீனம்: 汉武帝; மரபுவழிச் சீனம்: 漢武帝பின்யின்: hànwǔdìவேட்-கில்சு: Wu Ti), ( கிமு 156 [1]–29 மார்ச் , கிமு 87), தற்கால சீன மாகாணத்தில் முன்பு ஆண்ட ஹான் வம்சத்தின் ஏழாவது பேரரசர். ஒருங்கிணைத்த திடமான கன்ப்யுசியஸ் மாநிலம் மற்றும் அவரது ராஜ்ஜிய விஸ்தரிப்புக்காக பெரிதும் பாரட்டபெற்று ,இன்றும் நினைவில் நிற்பவர் பேரரசர் வு. சீன வரலாற்றின் மாப்பெரும் பேரரசர் மற்றும் ஹான் வம்சத்தின் சிறந்த பேரரசர் என்றும் அவர் கருத பட்டார்.

லயு ச்சே
மேற்கு ஹான் வம்சத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்9 மார்ச் 141 கிமு - 29 மார்ச் 87 கிமு
(54 ஆண்டுகள் 20 நாட்கள் )
முன்னையவர்பேரரசர் ஜிங்
பின்னையவர்பேரரசர் சாவோ
பிறப்பு10 ஆகஸ்ட் 156 BC
இறப்பு29 மார்ச் 87 BC (அகவை 68)
துணைவர்பேரரசி சென் ஜியோ (陳嬌)
பேரரசி வேய் ஸிபு (衛子夫)
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசி வேய் (衛長公主)
இளவரசி யன்க்ஷி (陽石公主)
இளவரசி சுயி (諸邑公主)
லயு சு , மகுட இளவரசன் லி (戾太子劉據)
லயு போ , ச்சாங்க்யின் இளவரசர் ஐ (昌邑哀王劉髆)
லயு ஹோங் , க்வியின் இளவரசர் ஹுஅய் (齊懷王劉閎)
லயு டேன் , யானின் இளவரசர் லா (燕刺王劉旦)
லயு உ , குஅங்க்ளிங் இளவரசர் லி (廣陵厲王劉胥)
லயு புலிங் , பேரரசர் சாவோ (昭帝劉弗陵)
பெயர்கள்
வம்சாவளி பெயர் : லயு (劉)
இட்ட பெயர் : ழி , பின்பு ச்சே (徹)
மரியாதை பெயர் : டோங் (通)
சகாப்த காலங்கள்
ஜியான்யுஅன் 建元 (140 கிமு – 135கிமு)
யுஅங்குனாக் 元光 (134கிமு – 129 கிமு)
யுஅந்ஸ்ஹுஒ 元朔(128 கிமு – 123 கிமு)
யுஅந்ஸ்ஹௌ 元狩 (122 கிமு – 117 கிமு)
யுஅண்டிங் 元鼎 (116 கிமு – 111 கிமு)
யுஅன்பிங் 元封 (110 கிமு – 105 கிமு)
தைச்சு 太初 (104 கிமு – 101 கிமு)
தியாணன் 天漢 (100 கிமு – 97கிமு)
டைஷி 太始 (96 கிமு – 93 கிமு)
செங்கே 征和 (92 கிமு – 89 கிமு)
ஹுஅன் 後元 (88 கிமு – 87 கிமு)
மறைவுக்குப் பிந்தைய பெயர்
சிறுப்பெயர் : பேரரசர் வு (武帝) " முழுப்பெயர் : க்ஸ்யாவ் வு ஹுஅங்க்டி (孝武皇帝)
கோயில் பெயர்
ஷிசொங் (世宗)
தந்தைஹானின் பேரரசர் ஜிங்
தாய்பேரரசி வாங் ழி (王娡)

இராணுவ தளபதியான பேரரசர் வு , ஹான் சீனாவை மாப்பெரும் விஸ்தரிப்புக்கு இட்டு சென்றார் - அதன் உச்சத்தில் அவரது ராஜ்யம் மேற்கில் க்ய்ர்க்ய்ழ்ச்டன்-இலிருந்து , வடக்கிழக்கில் வட கொரியாவரை , தெற்கில் வட வியட்னாம்வரை பறந்து விரிந்திருந்தது.

எதேச்சாதிகார மற்றும் மத்தியமான தலைமை அமைத்த பொழுதும், பேரரசர் வு கன்ப்யுசியநிச கொள்கைகளை பின்பற்றி,அதையே மாகாணத்தின் தத்துவமாக்கினார். அந்த கொள்கைகளின்ப்படி நடக்க வருங்கால நிர்வாகிகளுக்கு ஒரு பள்ளி அமைத்து நடத்தினார். பேரரசர் வுவின் ஆட்சிக்காலம் ஆண்டுகள் நிலைத்தது - 1800 ஆண்டுகள் பின் பேரரசர் கங்க்சியின் ஆட்சிகாலம் தான் இவரது சாதனையை முறியடித்து.

கிமு 141-ல் பேரரசர் சிங்கின் மறைவுக்கு பிறகு,மகுட இளவரசன் ச்சே தன பதினைந்து வயதில் பேரரசர் வுவாக அரியணை ஏறினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. இவரது பிறந்தநாள் சில சமயம் 27 ஆகஸ்ட் என கருத படுகிறது
முன்னர் ஹான் வம்சத்தின் பேரரசர்
கிமு 141– கிமு 87
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனின்_பேரரசர்_வு&oldid=3603365" இலிருந்து மீள்விக்கப்பட்டது