ஆனைக்கட்டி அருவி
ஆனைக்கட்டி அருவி அல்லது செக்காத்திப்பாறை அருவி (Yaanaikatti Falls) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் உள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பச்சைமலையில் உள்ளது. துறையூரிலிருந்து தண்ணீர் பள்ளம் செல்லும் வழியில், மயிலூற்று அருவிக்கு வடமேல் பகுதியில் உள்ளது.[1]
அமைவிடம்
தொகுதுறையூரிலிருந்து, தண்ணீர் பள்ளம் செல்லும் வழியில் மயிலூற்று அருவி அமைந்துள்ள பச்சை மலையின் மற்றொரு பகுதியின் உச்சியில் ஆனைக்கட்டி அருவி (செக்காத்திப்பாறை) உள்ளது. இது சற்று அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.[2]
நீர்போக்கு
தொகுஆனை கட்டி அருவியில் நீர் வரத்து அதிகரிக்கும்போது உபரிநீரானது லாடபுரம், ஈச்சம்பட்டி, குரும்பலூர், பாளையம், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் துறைமங்கலம் ஏரிகளை நிறைக்கும்.[3]
பருவம்
தொகுஆண்டின் பெரும்பகுதியில் வறண்டிருப்பினும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பொழியும் மழையால் இந்த அருவி செழிப்புற்றுச் சுற்றுலா ஈர்ப்புப் பகுதியாக விளங்குகின்றது.