ஆன்டன் வான் லீவன்ஹூக்

(ஆன்டனி வான் லீவன்கூக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek, 1632-1723), நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண்ணோக்கிகளை உருவாக்கியவரும் ஆவார். இவரை நுண்ணுயிரியலின் தந்தை என்பர். இவரே முதலாவது நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் நுண்ணோக்கிகளை களை மேம்படுத்தியதுடன், நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படும் ஒருகல விலங்குகளை முதன் முதலில் அவதானித்தவரும் இவரே. அவர், 247க்கும் மேற்பட்ட நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கினார்; அவற்றுள் சில, 270 மடங்குக்கும் அதிகமாக உருப்பெருக்கம் செய்யும் திறன் பெற்று இருந்தன. பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், ஸ்பெர்மடோசோவாக்கள், தசைநார்கள், குருதிச் சுற்றோட்டத்தொகுதியில், மயிர்த்துளைக்குழாய்களூடாக, குருதியின் அசைவு என்பவற்றை நுண்ணோக்கியில் அவதானித்து அறிவித்தவரும் இவரே. இரத்த நாள ஓட்டம் பற்றிய விவரிப்பில், இரத்தச் சிவப்பு அணுக்களைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

ஆன்டன் வான் லீவன்ஹூக்
Jan Verkolje - Antonie van Leeuwenhoek.jpg
பிறப்பு24 அக்டோபர் 1632
டெல்ஃப்ட்
இறப்பு26 ஆகத்து 1723 (அகவை 90)
டெல்ஃப்ட்
பணிஉயிரியல் அறிஞர், instrument maker, merchant
கையெழுத்து
Antonie van Leeuwenhoek Signature.svg

வெளி இணைப்புகள்தொகு