அந்தீசா

ஈரானின் மாகாணம்
(ஆன்டிசே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆன்டிசே (Andisheh ; பாரசீக மொழி: انديشه‎, பிற பெயர்கள்: Andīsheh) என்பது சாகியர் கவுண்டியின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 19,945 குடும்பங்களில், 75,596 நபர்கள் வசித்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஈரானில் கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 116,063 ஆகும். 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 85 வது இடத்தினைப் பெறுகிறது.[1] 2003 ஆம் ஆண்டு, இந்த நகராட்சி தொடங்கப்பட்டது.

ஆன்டிசே
انديشه
நகரம்
ஆன்டிசே is located in ஈரான்
ஆன்டிசே
ஆன்டிசே
ஆள்கூறுகள்: 35°42′01″N 50°59′59″E / 35.70028°N 50.99972°E / 35.70028; 50.99972
Country ஈரான்
Provinceதெகுரான் மாகாணம்
CountyShahriar
BakhshCentral
மக்கள்தொகை
 (2016 Census)
 • மொத்தம்1,16,062 [1]
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)

ஆன்டிசே ஒரு புதிய திட்டமிடப்பட்ட நகரம் ஆகும். இது தெகுரான் நகரிலிருந்து 30 கிலோமீட்டர்கள் (19 mi) தொலைவில் அமைந்துள்ளது.இதன் வடமேற்குத் திசையில் சாரியார் நகரமும், தென்கிழக்கில் காரஜ் நகரமும் அமைந்துள்ளது.

2000 ஆம் ஆண்டில், இந்த புதிய குடியேற்ற நகரத்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 31,650 ஆக இருந்தது. மேலும் "மூன்றாம் திட்டத்தின்" முடிவில் இந்த எண்ணிக்கை 50,000-தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்டிசே நகரத்தில் 150,000 குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கு ஏற்ற, உட்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், 'தங்கநீர் நீச்சல் குளம்' கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியே இரண்டு வளாகங்கள் உள்ளன. ஒவ்வொரு வளாகத்திலும் நீச்சல் குளம் (ஆழம் 4 மீட்டர்), குழந்தைகள் குளம், உலர்ந்த கல்நீராவிக்குளியலகம், நீராவி அறை, மகிழ்நீர்த் தொட்டி, ஒரு குளிர்ந்த நீர் குளம், மூடுபனியரங்கம், மழைச் சுரங்கம், காபி கடை ஆகியவை உள்ளன. மேலும் காண்க: கோல்டன்வாட்டர்ஸ் வலைத்தளம்

மக்கள் தொகை

தொகு

பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[2][3] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 116,062 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 96,807 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +19.89% அதிகரித்துள்ளது.

போக்குவரத்து

தொகு

இந்த நகரத்தை தெகுரான் மற்றும் கராஜுடன் நகரங்களுடன் இணைக்க , ஆன்டிசே நகராட்சி நடத்தும் ஆன்டிசே நகராட்சி பேருந்து அமைப்பும், புறநகர் பேருந்து அமைப்பும் தனித்தனியே இயக்கும், பேருந்துகள் பயன்படுகின்றன.

காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 https://www.amar.org.ir/english
  2. Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
  3. "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தீசா&oldid=3093590" இலிருந்து மீள்விக்கப்பட்டது