ஆன்மலிங்க மாலை
ஆன்மலிங்க மாலை என்னும் நூல் சிவபூசை செய்பவரின் ஐங்களத் தூய்மை [1] பற்றிக் கூறுகிறது.
- உடலிலுள்ள ஐம்பொறிகள் (பூதம்)
- பூசை செய்யும் இடம் (ஸ்தலம்)
- பூசைக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் (திரவியம்)
- வழிபாட்டு மொழி (மந்திரம்)
- பூசை செய்யப்படும் லிங்கம்
ஆகிய ஐந்தும் தூய்மையானதாக இருக்கவேண்டும் என இந்நூல் விளக்குகிறது.
- 14 சீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்னும் பாடல் 11 கொண்டது இந்த நூல்.
இந்த நூலின் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசரின் மாணவர் என்பதை இந்நூலின் பாடல் பகுதிகள் தெரிவிக்கின்றன. இந்த நூலிலுள்ள பாடல்கள் எல்லாம்
- --- காட்சம் வைத்தருள்
- சிவோக மாயிருக்கச் சிதம்பரனே
- கமலைவாழ் தியாகா, காசிவிச்சு வேகா
- கயிலாய பதியெனும் குருவே.
என்று முடிகின்றன.
கமலை ஞானப்பிரகாசர் காலம் 1565. எனவே இவரது மாணாக்கர் காலம் 16-ஆம் நூற்றாண்டு எனத் தெளிவாகிறது.
- பாடலாசிரியரின் ஆன்மலிங்கமாக விளங்குபவர் அவரது ஆசிரியர். அவர்மீது பாடப்பட்டதால் இந்த நூல் ஆன்மலிங்க மாலை எனப் பெயர் பெற்றது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ பஞ்ச சுத்தி