ஆபராணி அனந்த நாராயணப் பெருமாள் கோயில்
ஆபராணி அனந்த நாராயணப் பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருக்கண்ணங்குடியின் அபிமானத்தலமாகவும், பஞ்ச நாராயணத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. [1]
இறைவன், இறைவி
தொகுஆபரணம் தரித்த நிலையில் புஜங்க சயனத்தில், ஏழுதலை பாம்பணையில் உள்ளார். ஆபரணங்கள் அணிந்தவர் என்ற நிலையில் இவர் ஆபரணதாரி என்றழைக்கப்படுகிறார். நாளடைவில் ஆபரணதாரி என்பது ஆபராணி என்றாகிவிட்டது. [1]
அமைப்பு
தொகுகருவறையில் ஆதிசேஷன் மீது தென்திசையில் தலை வைத்த நிலையில் வட திசை நோக்கி பாதங்களை நீட்டிய நிலையில் சயனித்த கோலத்தில் உள்ளார். [1]