ஆப்பரேசன் தண்டர் பேர்டு

ஆப்பரேசன் தண்டர் பேர்டு (Operation Thunder Bird) என்பது காட்டுயிரிகள் தொடர்பான குற்றத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். இது இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் வனவிலங்குக் குற்றவியல் வாரியமும்(WCCB), வனத்துறை, காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமும் ஒன்றிணைந்து இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 19 வரை காட்டுயிரிகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.[1]

நடவடிக்கைச் செயலாக்க அமைப்புகள் தொகு

இன்டர்போல் எனப்படும் பன்னாட்டுக் குற்றவியல் தடுப்புக் காவல் பிரிவு உலக அளவில் நடைபெறும் வனவிலங்குகளின் சட்டவிரோதக் கடத்தல் வேட்டையாடுதல் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எதிரான குற்றங்களைக் கண்டறியம் ஆப்பரேசன் தண்டர் பேர்டு என்ற பெயரில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்நிலையில் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் WCCB எனப்படும் வனவிலங்கு குற்றத்தடுப்பு வாரியம் (Wild Life Crime Control Bureau) இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் ஆகியவை இதில் பங்குகொண்டன.

ஆப்பரேசன் தண்டர் பேர்டு என்பது பன்னாட்டுக் குற்றவியல் தடுப்புக் காவல் பிரிவு என்ற அமைப்பினால் இந்தியாவில் தேசிய, பன்னாட்டு பல்வகை உயிரிகளைக் காக்கும் செயலாக்க நடவடிக்கைக்கான ஒரு குறிச்சொல்லாகும்.[2] இது ஆமைகளைக் காக்க இந்த அமைப்பால் முன்பே ஏற்படுத்தப்பட்ட ‘ஆபரேசன் சேவா கர்மா’ என்ற நடவடிக்கையுடன் கூடுதலாக இணைக்கப்பட்டதாகும்.

விளைவுகள் தொகு

இத்திட்ட செயலாக்க நடவடிக்கையின் விளைவாக மொத்தம் 2,524 வகைப்படுத்தப்பட்ட உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டன. 19.2 கி. யானைத்தந்தம், ஒரு புலித்தோல், 9 காட்டுயிரிகளின் பதப்படுத்திய சடலங்கள், ஒரு பவள உயிரினம், ஒரு ஜார் எனப்படும் பாம்பின் நஞ்சு, எட்டு சிறுத்தைத் தோல்கள், ஒரு இந்திய முஜாராக் எனப்படும் ஒரு விலங்கின் தோல் ஆகியன கைப்பற்றப்பட்டன.[3] இந்த நடவடிக்கை இந்திய அளவில் வனவிலங்குக் குற்றத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து அமைப்புகளுக்கிடையே ஒரு ஒருமித்த அணுகுமுறையை ஏற்படுத்தியது.[1] இந்த நடவடிக்கையின் விளைவாக இக்குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த 71 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நடவடிக்கை அசாம், மேகாலயா, மகாராட்டிரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், தில்லி, உத்திராகண்ட், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது.[2] ப்ன்னாட்டு ̈நிறுவனமான இன்டர்போல் அமைப்புடன் இணைந்து பணியாற்றியதால் வனவிலங்குகளுக்கு ஏதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பான பல்வேறு செயல்நெறிமுறைகளை இந்தியப் படைப்பிரிவினர் அறிந்து கொண்டதோடு, நாட்டில் இயங்கும் வனவிலங்குகளுக்கான சட்டவிரோத வணிக மையங்கள் சட்ட விரோத வணிக வழித்தடங்கள் தொடர்பாக விழிப்புணர்வை தோற்றுவித்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "WCCB's Operation Thunderbird and Operation Save Kurma for fight against wildlife crime Read more at: http://currentaffairs.gktoday.in/wccbs-operation-thunderbird-operation-save-kurma-fight-wildlife-crime-03201742015.html". General knowledge today. March 3, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 19, 2017. {{cite web}}: External link in |title= (help)
  2. 2.0 2.1 "'Operation Thunder Bird' a big success for Forest Dept". business-standard.com. March 3, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 19, 2017.
  3. ""OPERATION THUNDERBIRD" Result in huge seizures throughout the Country". THE TIMES OF INDIA. March 3, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 19, 2017.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பரேசன்_தண்டர்_பேர்டு&oldid=3708956" இலிருந்து மீள்விக்கப்பட்டது