ஆமென் (ஒலிப்பு) (எபிரேயம்:אָמֵן ’Āmēn ,அரபு: آمين ஆமீன்) ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும். யூத மதத்தில் பழங்காலம் முதல் இச்சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது.[1] கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனில் மகிழ்ச்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தில் சுராக்களை முற்றும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது.

விவிலியத்தில் ஆமேன்

தொகு

விவிலியத்தில் மூன்று பயன்பாடுகள் நோக்கத்தக்கவை.

  • வசனத்தின் முன், மற்றைய பேச்சாளரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் போது. உதாரணமாக;1அரசர்1:36
  • ஆச்சரிய ஆமேன், ஆச்சரியத்துகுள்ளான போது.உதாரணமாக;நேகேமியா 5:13
  • முற்று ஆமேன், ஒரு பேச்சாளர் தனது பிரசங்கத்தை/பேச்சை முடிப்பதற்காக பயன்படுத்துவது.

கிறிஸ்தவ விவிலியத்தில் மொத்தம் 99 முறை "ஆமேன்" பாவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. எ.கா: எண்ணிக்கை 5:22, இணைச் சட்டம் 27.15-26
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமென்&oldid=2757247" இலிருந்து மீள்விக்கப்பட்டது