ஆம்பல் (அணிகலன்)
ஆம்பல் என்பது சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் அணியும் ஒருவகை வளையல் ஆகும். இந்த அணிகலன் இயற்கையாக மலர்ந்த ஆம்பல் மலரால் ஆனதாக இருந்திருக்கலாம். [1] ஆம்பல் அணிகலனாகிய (வள்ளி) வளையலை அணிந்த மகளிர் குன்றுகளில் ஏறி நீரில் பாய்ந்து விளையாடியதை பரணர் என்ற சங்கப்புலவர்
“ | "ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
குன்று ஏறிப் புனல் பாயின்"[2] |
” |
எனப் புறநானூறில் பாடியுள்ளார்.