ஆம்பீனிகால்
ஆம்பீனிகால்கள் (Amphenicols) என்பவை பீனைல்புரொபனாயிடு கட்டமைப்பில் உள்ள ஒரு வகையான எதிர் உயிரிகளாகும். பாக்டீரியாவின் 50S ரைபோசோம் துணையலகின் மீது ஊக்கிப்புரதம் பெப்டைடில் மாற்றுநொதியை தடைசெய்து இவை செயலாற்றுகின்றன..[1]
குளோரம்பீனிகால், தையாம்பீனிகால், அசிடாம்ஃபெனிகால் மற்றும் புளோரோஃபெனிகால் முதலியன ஆம்பீனிகால்களுக்கு உதாரணங்களாகும். இவற்றுள் முதலாவது சேர்மமாகக் கருதப்படுவது குளோரம்பீனிகால் ஆகும். முதன்முதலில் 1949 ஆம் ஆண்டு இயற்கைப் பொருளாக குளோரம்பீனிகால் கண்டறியப்பட்டது. ஆனால் தற்பொழுது அனைத்து ஆம்பீனிகால்களும் செயற்கையாக வேதியியல் தொகுப்பு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "APVMA: Florfenicol". Archived from the original on 2007-09-07. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.