ஆயக்குடி கைலாச நாதர் கோயில்
ஆயக்குடி கைலாச நாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அருள்மிகு கைலாச நாதர் கோயில்,ஆயக்குடி,திருவாரூர் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஆயக்குடி |
பெயர்: | அருள்மிகு கைலாச நாதர் கோயில்,ஆயக்குடி,திருவாரூர் |
அமைவிடம் | |
ஊர்: | ஆயக்குடி |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கைலாச நாதர் |
தாயார்: | விசாலாட்சி |
சிறப்பு திருவிழாக்கள்: | திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி. |
அமைவிடம்
தொகுஇக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்க்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி விசாலாட்சி ஆவார். [1]
சிறப்பு
தொகுதிருவாரூர் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களுக்கு தினமும் பூசை தொடர்ந்து நடப்பதற்காக ஆய்க்குடி என்ற ஒரு கிராமமே உருவாக்கப்பட்டதாகக் கூறுவர். அக்கோயில்களுக்கு விளக்கெரிப்பதற்காக எண்ணெய் இங்கிருந்து அனுப்பப்பட்ட பெருமையை உடையது.[1]
திருவிழாக்கள்
தொகுஐப்பசி அன்னாபிசேகம், கார்த்திகைத் திருவிழா போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]