ஆயிரம் காளியம்மன் கோயில்

ஆயிரம் காளியம்மன் கோயில் (Aayiram Kaliamman Temple) இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஒரு பழங்கால இந்துக் கோயில். இந்த கோயிலின் மரத்தாலான காளியம்மன் சிலை பிரதான தெய்வத்திற்கு மிகவும் பிரபலமானது.

வரலாறு தொகு

 
ஆயிரம் காளியம்மன் கோயில்

செவி வழி கதையின் படி, செங்குந்தா முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பக்தர், கடலோரப் பகுதியில் காளியம்மன் தேவியின் சிலை வைத்து ஒரு பெட்டியை கண்டு எடுப்பதாதாக கனவு கண்டார். அடுத்த நாள் அவர் உண்மையிலேயே ஒரு ஓலைச்சுவடியையும், ஒரு சிலையுடன் இருந்த ஒரு வெள்ளிப் பெட்டியைக் கண்டார்.  . 

அந்த ஓலைச்சுவடி படி தினமும் 1000 சடங்கு பொருள்களுடன் பூஜை செய்வது சாத்தியமற்றது என்பதால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூஜை நடத்த சமூகம் முடிவு செய்தது. தமிழ் மாதமான வைகாசி காலத்தில் (மே-ஜூன்), ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் திருவிழா நடத்தப்படுகிறது.[சான்று தேவை]

திருவிழா தொகு

 
அருள்மிகு அபிராமி அம்மான் ஆலயம்

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், 1000 பொருட்களுடன் ஒரு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஆயிரம்காளியம்மன் கோயிலில் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலும் உள்ள பக்தர்கள் வந்து கலந்துகொள்கின்றனர்

தேவி சிலை தொகு

தெய்வதின் சிலை முழுக்க மரத்தினால் ஆனது. சிலையுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஒரு மர பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. [1]

குறிப்புகள் தொகு

  1. "Karaikal Aayiram Kaliamman Temple". karaikal.gov.in. Archived from the original on 2018-01-04. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.