ஆய் சங்க கால சிற்றரசுகளில் ஒன்றாகும். ஆய் மன்னர்களை பற்றி பல இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடைஏழு வள்ளல்களில் ஒருவராக ஆய் ஆண்டிரனை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.இதனை சங்ககால வேளீர் (ஆயர்) குல மன்னர்கள் ஆயக்குடியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது[1]. ஆய் நாட்டிற்கு தெற்கே வேணாடும், வடக்கே பாண்டியநாடும், மேற்கே சேரநாடும் அமைந்திருந்தது.

ஆதாரங்கள்

தொகு
  1. பக். 7, வே.தி. செல்வம், கன்னியாகுமரி மாவட்டம்-அரசியல் சமூக வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்_நாடு&oldid=2864012" இலிருந்து மீள்விக்கப்பட்டது