சேரர்

(சேர நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேரர் எனப்படுவோர் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் ஆவர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழ்நாட்டின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூறம். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.[1]

சேர நாடு
பொ.ஊ.மு. 500–பொ.ஊ. 1102
கொடி of சேரர்
கொடி
தலைநகரம்வஞ்சி மற்றும் கரூர்
பேசப்படும் மொழிகள்தமிழ், மலையாளம்
சமயம்
வைணவம், சைவ சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்சங்க காலம், மத்திய காலம்
• தொடக்கம்
பொ.ஊ.மு. 500
• இரண்டாம் சேரர்கள்.
பொ.ஊ. 800
• முடிவு
பொ.ஊ. 1102
பின்னையது
}
சோழர்
தற்போதைய பகுதிகள் இந்தியா
சங்ககாலச் சேரர் ஆட்சி
சேர மன்னர்களின் பட்டியல்
கடைச்சங்க காலச் சேரர்கள்
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் பொ.ஊ. 45-70[சான்று தேவை]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பொ.ஊ. 71-129[சான்று தேவை]
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பொ.ஊ. 80-105[சான்று தேவை]
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பொ.ஊ. 106-130[சான்று தேவை]
சேரன் செங்குட்டுவன் பொ.ஊ. 129-184[சான்று தேவை]
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பொ.ஊ. 130-167[சான்று தேவை]
அந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
மாந்தரஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
வாழியாதன் இரும்பொறை பொ.ஊ. 123-148[சான்று தேவை]
குட்டுவன் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
பெருஞ்சேரல் இரும்பொறை பொ.ஊ. 148-165[சான்று தேவை]
இளஞ்சேரல் இரும்பொறை பொ.ஊ. 165-180[சான்று தேவை]
பெருஞ்சேரலாதன் பொ.ஊ. 180[சான்று தேவை]
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
குட்டுவன் கோதை பொ.ஊ. 184-194[சான்று தேவை]
மாரிவெண்கோ காலம் தெரியவில்லை
வஞ்சன் காலம் தெரியவில்லை
மருதம் பாடிய இளங்கடுங்கோ காலம் தெரியவில்லை
கணைக்கால் இரும்பொறை காலம் தெரியவில்லை
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை காலம் தெரியவில்லை
பிற்காலச் சேரர்கள்
பெருமாள் பாசுகர ரவிவர்மா பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு
edit

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன. சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்

தொகு

சங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமசுகிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.[1]

கேரளதேசம் சோழதேசத்திற்கு மேற்கிலும், அரபிக்கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு, கருநாடகதேசத்திற்கு தெற்கிலும் ஓர் அகன்று பரவி இருந்த தேசம்.[2]

இருப்பிடம்

தொகு

இந்த கேரளதேசத்தில் பூமி கிழக்கே உயரமாகவும், மேற்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். வடகேரளம், தென்கேரளம் என இரு பிரிவாகவும், தென்கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும், வடகேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கிவருகிறது.[3]

மன்னர்கள்

தொகு

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

சங்ககாலச் சேரர்கள்

தொகு

சங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. குறிப்பாக, சங்ககால நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

சேர வேந்தனின் பெயர் தந்தை பெயர் தலைநகரம் ஆட்சி செய்த காலம் ஆட்சியாண்டுகள்[4][5]
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்)
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் 25 ஆண்டுகள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் 25 ஆண்டுகள்
சேரன் செங்குட்டுவன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்) 55 ஆண்டுகள்
சேரமான் பெருஞ்சேரலாதன் பொ.ஊ.மு. 145[6]
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் நறவூர் 38 ஆண்டுகள்
சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை [7]
சேரமான் கோக்கோதை மார்பன் [8]
குட்டுவன் கோதை [9]
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை கருவூர்
செல்வக் கடுங்கோ வாழியாதன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை கருவூர் 25 ஆண்டுகள்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர்[10] 17 ஆண்டுகள்
இளஞ்சேரல் இரும்பொறை தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கருவூர் [11] 16 ஆண்டுகள்
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை கருவூர், மாந்தை பொ.ஊ. 141[12][13][14]
சேரமான் மாரிவெண்கோ [15]
சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை கருவூர்
சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கருவூர்
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் கருவூர்(பொருநை நதி பாயும் வஞ்சி)
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
கோதை மார்பன்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
பாலை பாடிய பெருங்கடுங்கோ
சேரமான் வஞ்சன்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

பிற்காலச் சேரர்கள்

தொகு
  • சேரமான் பெருமாள் நாயனார் (பொ.ஊ. 724-756)
  • சேரமான் ஐயனாரிதனார் (பொ.ஊ. 756-800)
  • குலசேகார வர்மன் (பொ.ஊ. 800-820)
  • இராசசேகர வர்மன் (பொ.ஊ. 820-844)
  • சாந்தனு ரவி வர்மன் (பொ.ஊ. 844-885)
  • இராம வர்மா குலசேகர (பொ.ஊ. 885-917)
  • கோதை ரவி வர்மா (பொ.ஊ. 917-944)
  • இந்து கோதை வர்மா (பொ.ஊ. 944-962)
  • பாசுகரா ரவி வர்மன் I (பொ.ஊ. 962-1019)
  • பாசுகரா ரவி வர்மன் II (பொ.ஊ. 1019-1021)
  • வீர கேரளா (பொ.ஊ. 1021-1028)
  • இராசசிம்மா (பொ.ஊ. 1028-1043)
  • பாசுகரா ரவி வர்மன் III (பொ.ஊ. 1043-1082)
  • ரவி ராம வர்மா (பொ.ஊ. 1082-1090)
  • ராம வர்மா குலசேகர (பொ.ஊ. 1090-1102)
 
மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்

படைபலம்

தொகு
- பாவாணர்[16]

நகரங்கள்

தொகு

கரூர் மற்றும் வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரங்கள் சேர நாட்டின் தலை நகர்களாக விளங்கியன. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்[1]. தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

8 நாடு (மகா சாமந்தம்) பிரிவுகள்

தொகு

சேர மன்னர்களில் சேரமான் பெருமாள்கள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 8 (சாமந்தம் = கப்பம் செலுத்தும் நாடு) பிரிவுகளாக பிரித்து 8 மகா சாமந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்கள் மகா சாமந்தர்கள் என அறியப்பட்டனர். அவை:[2]

- சாமந்தம் பெயர் தலைநகர் பெயர்
1 ஏரநாடு கோழிக்கோடு
2 வேணாடு பத்மநாபபுரம்
3 ஓனாடு காயங்குளம்
4 கோனாடு --
5 கொடுக்குன்னி நாடு --
6 கோலத்து நாடு வழப்பட்டிணம்
7 போல நாடு --
8 வேம்பொலி நாடு (தெக்கன் கூறு, வடக்கன் கூறு) செங்கனச்சேரி

12 (சுதந்திர நாடு) பிரிவுகள்

தொகு

சேர மன்னர்களில் இறுதி மன்னன் மாகோதையார் என்ற சேரமான் பெருமாள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 12 (சுவரூபம் + விடுதலை நாடுகள்) பிரிவுகளாக பிரித்து 12 மன்னர்களிடம் (குருநில மன்னர்கள்) பிரித்து வழங்கப்பட்டது. அவை:[2]

- விடுதலை நாடுகள் தற்போதைய பகுதி
1 நெடியிருப்பு கோழிக்கோடு
2 ஆரங்கோடு வள்ளுவநாடு
3 பெரும்படப்பு கொச்சி
4 திருப்பாப்பூர் திருவிதாங்கூர்
5 குறும்பியாதிரி குறும்ப நாடு
6 புறநாட்டுக்கரை கோட்டையம்
7 கோளத்திரி சிரக்கல்
8 போர்ளாத்திரி கடத்த நாடு
9 தரூர் பாலக்காடு
10 பாப்புக்கோயில் பெய்ப்பூர்
11 பரப்புக்கோயில் பரப்ப நாடு
12 ஒன்றில் பரப்ப நாட்டின் ஒருபகுதி

மலை, காடு, விலங்குகள்

தொகு

இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருசகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும் இவற்றில் அகில், சந்தனமரங்களும், மந்தம், மிருகம் என்ற யானைகளும் இருக்கும்.[3]

நதிகள்

தொகு

இந்த பாண்டியதேசத்தில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் முரளா, கேரளதேசத்தை செழிக்க வைக்கின்றது.[17]

வேளாண்மை

தொகு

இந்த கேரளதேசத்தில் நெல், வாழை, கரும்பு, ஏலம், கிராம்பு, போன்ற பயிர்களும், பயறு வகைகளும் விளைகின்றன.

கருவி நூல்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Nagaswami, R. (1995), Roman Karur: A peep into Tamil's past பரணிடப்பட்டது 2008-05-15 at the வந்தவழி இயந்திரம், Brahad Prakashan, Madras
  2. 2.0 2.1 2.2 "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  3. 3.0 3.1 புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 283 -
  4. பதிற்றுப்பத்து
  5. சு. இரத்தினசாமி, சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி), மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.
  6. இவன், கரிகால் சோழனுடன் போரிட்டதால், அவனுடைய காலத்தவன் எனக்கொள்ளலாம். மேலும், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே போர் நடந்தது. இப்போரை, கழாத்தலையார், பரணர் ஆகிய இருவரும் பாடியுள்ளனர். இவர்களில், கழாத்தலையார், சேரமான் பெருஞ்சேரலாதனையும், பரணர், சேரன் செங்குட்டுவனையும் பாடியுள்ளார்கள் என்பதால், இவன், சேரன் செங்குட்டுவனின் சற்றேறக்குறைய சமகாலத்தவன். மேலும், கழாத்தலையார், சேரமான் பெருஞ்சேரலாதனையும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார் என்பதால் இருவரும் சற்றேறக்குறைய சமகாலத்தவர்.
  7. இவனுக்கும், சோழன் செங்கணானுக்கும் இடையே போர் நடந்தது என்பதால் இவனை சோழன் செங்கணானின் சமகாலத்தவன் எனக்கொள்ளலாம். மேலும், இவனைப் பாடிய பொய்கையார் சேரமான் கோக்கோதை மார்பனையும் பாடியுள்ளார் என்பதால், சேரமான் கோக்கோதை மார்பனும் இவனின் சற்றேறக்குறைய சமகாலத்தவன் எனலாம்.
  8. சேரமான் கணைக்கால் இரும்பொறையின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.
  9. இவனைப் பாடிய கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பாடியுள்ளார் என்பதால் இவர்கள் சற்றேறக்குறைய சமகாலத்தவர்கள் எனலாம். மேலும், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப் பாடிய காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரும் உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் புகழூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்படும் பிட்டங்கொற்றனையும் பாடியுள்ளார்கள் என்பதால், இவனை, பிட்டங்கொற்றனின் சற்றேறக்குறைய சமகாலத்தவன் எனலாம். புகழூர்க் கல்வெட்டை தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை வெட்டியதால், இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.
  10. புகழூர்க் கல்வெட்டு வெட்டிய இவன், ஜம்பைக் கல்வெட்டு வெட்டிய அதியமான் நெடுமான் அஞ்சியுடன் போர் புரிந்தவன் என்பதால் இவன் அவன் காலத்தவன் எனலாம். மேலும், மலையமான் திருமுடிக்காரி மற்றும் வல்வில் ஓரியின் சமகாலத்தவன்.
  11. இவன், பெரும்பூட் சென்னியுடன் போர் புரிந்ததால் அவன் காலத்தவன் எனலாம்.
  12. பதிற்றுப்பத்தில் இவனது இறப்பு எரிமீன் விழுவதுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பல்வேறு பண்பாடுகளில் எரிமீன் விழுவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எரிமீன் ஹேலியின் வால்வெள்ளியாகும்.
  13. Williams, John (1871), Observations of Comets, from B.C. 611 TO A.D. 1640, Royal Astronomical Society. London:Strangeways and Walden. Extracted from the Chinese Annals: ...and a Chinese celestial Atlas.
  14. இவன், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடன் போரிட்டதால் அவன் காலத்தவன்.
  15. இவன், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி மற்றும் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகியோரின் சமகாலத்தவன். மேலும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே போர் நடந்தது என்பதால், இவன், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.
  16. பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42
  17. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 284-
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரர்&oldid=4090661" இலிருந்து மீள்விக்கப்பட்டது