சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை
சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். புலவர் பெருங்குன்றூர் கிழார் இவனைப் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. புலவர் புகழ்ந்து பாடிய பாடல்களைக் கேட்ட பின்னரும் பரிசில் வழங்காமல் இவன் காலம் கடத்தியிருக்கிறான்.
மனைவி பசியால் உயிர் போகாமல் துடிக்கிறாள் எனப் புலவர் கூறக் கேட்டும் இவன் காலம் கடத்தியிருக்கிறான்.[1]
‘நீ பாடுபுகழை வாங்கிக்கொண்டு பரிசில் தரவில்லை. நான் என்ன செய்யமுடியும். போகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் புலவர் சென்றிருக்கிறார்.[2]